search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் - 400 வாழைகள் நாசம்
    X

    கூடலூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் - 400 வாழைகள் நாசம்

    கூடலூர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை அட்டகாசம் செய்ததில் 400 வாழைகள் நாசமாகின.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்துகிறது. மேலும் விவசாய தோட்டங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. பாடந்தொரை அருகே மூலதைதமட்டம் கிராமத்துக்குள் ஒரு காட்டு யானை நேற்று அதிகாலை 4 மணிக்கு புகுந்தது.

    பின்னர் கோவிந்தன் என்பவரின் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியது. தொடர்ந்து விடியற்காலை 6 மணிக்கு அருகே உள்ள வனத்துக்குள் காட்டு யானை சென்றது. வழக்கம் போல் தோட்டத்துக்கு வந்த விவசாயி கோவிந்தன் தன்னுடைய வாழைகளை காட்டு யானை நாசம் செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் கடன் வாங்கி பயிரிட்டு இருந்த வாழைகளை காட்டு யானை சேதப்படுத்தி விட்டதே என கண் கலங்கினார். இது குறித்து வருவாய் மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் யாரும் வர வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட கோவிந்தன் வருவாய் துறையிடம் புகார் மனு அளித்தார். அதில் காட்டு யானையால் 400 வாழைகள் நாசமாகி விட்டது. இதனால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார். இதேபோல் ஸ்ரீமதுரை ஊராட்சி சேமுண்டி பகுதியிலும் காட்டு யானை அட்டகாசத்தால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஊருக்குள் யானைகள் வருவதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×