search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு யானை அட்டகாசம்"

    • காட்டுயானை அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
    • காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி, பெருங்கானல், மங்களம்கொம்பு, தடியன்குடிசை, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது. இந்த காட்டுயானை அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் சம்பவத்தன்றுஇரவு பெருங்கானலை சேர்ந்த விவசாயியான கரியமங்களம், சோனைமுத்து, மணிவண்ணன், என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்துக்குள் ஒற்றை யானை புகுந்தன. அப்போது அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு, போன்ற வற்றை நாசம் செய்தன.

    பின்னர் அந்த வழியாக வந்த காட்டு யானை கல்லாறு வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே பெருங்கானல் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேத்துப்பாறை பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களையும், பணப் பயிர்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தி வருகிறது.
    • காட்டு யானைகள் புகுந்து தாக்குவதை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதியில் வாழும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    கொடைக்கானல் :

    கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை கிராமத்தை ஒட்டிய பகுதிகளான பாரதி அண்ணா நகர், அஞ்சு வீடு பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களையும், பணப் பயிர்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சேதப்படுத்தி வருகிறது.

    இதில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக இந்தக் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதுவரை வனத்துறையினரால் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முழுமையான தீர்வை உருவாக்க முடியவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. தினசரி ஏதாவது ஒரு வீடு அல்லது விவசாய நிலங்களை சேதப்படுத்துவது காட்டு யானைகளின் வாடிக்கையாக உருவாகியுள்ளது. இதே போல் நேற்று பாரதி அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின்முன் பகுதியில் உள்ள கதவை யானை சேதப்படுத்தி உள்ளது.

    அதிர்ஷ்டவசமாக வீட்டிற்குள் போகாமல் காட்டு யானைகள் சென்றதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அன்றாடம் காட்டு யானைகள் புகுந்து தாக்குவதை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதியில் வாழும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×