search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்
    X

    சமூக ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி முகிலன் மீட்பு மக்கள் நல போராட்ட கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்: 

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி முகிலன் மீட்பு மக்கள் நல போராட்ட கூட்டியக்கம் சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதற்கு மக்கள் உரிமை பொது மேடையை சேர்ந்த அசன் முகமது தலைமை தாங்கினார். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன சமூக ஆர்வலர் முகிலனை தமிழக அரசு கண்டுபிடித்து தர வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தமிழகத்தில் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. பொருளாளர் ரவிச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், இந்திய தேசிய காங்கிரசின் தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்டு ஞானசேகரன், திராவிட கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளரும், மூத்த வக்கீலுமான காமராசு உள்பட பலர் பேசினர். 

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காணாமல் போன முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர். முன்னதாக சமூக ஆர்வலர் சுகுமார் வரவேற்றார். முடிவில் செந்தமிழ்வேந்தன் நன்றி கூறினார்.
    Next Story
    ×