search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளை சித்த மருத்துவக்கல்லூரியில் பொங்கல் பண்டிகையை ஆடிப்பாடி கொண்டாடிய மாணவ-மாணவிகள்
    X

    பாளை சித்த மருத்துவக்கல்லூரியில் பொங்கல் பண்டிகையை ஆடிப்பாடி கொண்டாடிய மாணவ-மாணவிகள்

    பாளை முருகன் குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் தமிழ் கலாச்சாரப்படி மாணவ- மாணவிகள் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.#Pongal
    நெல்லை:

    தமிழர் திருநாளான பொங்கல் விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பாளை முருகன் குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் தமிழ் கலாச்சாரப்படி மாணவ- மாணவிகள் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

    இதையொட்டி கல்லூரி பகுதி முழுவதும் வண்ண பொடிகளால் கோலம் போடப்பட்டிருந்தது. மேலும் கரும்பு, மஞ்சள் குலைகள் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு துறை மாணவ- மாணவிகள் பொங்கலிட்டு கொண்டாடினர்.



    இதில் கலந்துகொண்ட பெரும்பாலான மாணவ- மாணவிகள் தமிழ் கலாச்சாரத்தின்படி வேஷ்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து கலந்து கொண்டனர். அவர்கள் குலவையிட்டு பொங்கலிட்டனர். மேலும் தமிழ் கலாச்சார நடனமான பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம் போன்ற நடனங்களை மாணவ- மாணவிகள் ஆடி மகிழ்ந்தனர்.

    இந்த விழாவில் சித்தா கல்லூரியின் முதல்வர் நீலாவதி, பேராசிரியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. #Pongal
    Next Story
    ×