search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 4 பேர் அ.தி.மு.க.வில் சேர என்னிடம் தூதுவிட்டனர் - ஓ.பன்னீர்செல்வம்
    X

    தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 4 பேர் அ.தி.மு.க.வில் சேர என்னிடம் தூதுவிட்டனர் - ஓ.பன்னீர்செல்வம்

    தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களில் 4 பேர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர என்னிடம் தூதுவிட்டனர் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். #OPanneerselvam #ADMK

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கத்தமிழ்ச்செல்வன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு ரூ.1088 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருகிற இடைத்தேர்தலில் சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெறும். இதற்காக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோரை தொகுதி பொறுப்பாளர்களாக நியமித்துள்ளோம்.

    தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் 4 பேர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர என்னிடம் தூதுவிட்டனர். செந்தில் பாலாஜியும் தி.மு.கவில் இணைவதற்கு முன்பு என்னிடம் தூதுவிட்டார். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க மகத்தான வெற்றிபெறும் முறையில் தொண்டர்கள், நிர்வாகிகள் பணியாற்றவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #OPanneerselvam #ADMK

    Next Story
    ×