search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாயல்குடி தனியார் நகை அடகு கடையில் ரூ.25 லட்சம் மோசடி - மேலாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு
    X

    சாயல்குடி தனியார் நகை அடகு கடையில் ரூ.25 லட்சம் மோசடி - மேலாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு

    சாயல்குடியில் உள்ள அடகு நிறுவனத்தில் ரூ.24 லட்சத்து 74 ஆயிரம் மோசடி செய்ததாக முன்னாள் மேலாளர் உட்பட 5 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    ராமநாதபுரம்:

    சாயல்குடி முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்தவர் கமல்ராஜ் (வயது 30) இவர் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி முதல் அக்டோபர் 22-ந்தேதி வரை 15 வாடிக்கையாளர்கள் பெயரில் தங்க நகையை அடகு வைத்ததாக ஊழியர்களின் உதவியுடன் ரூபாய் 24 லட்சத்து 74 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.

    இது வங்கியில் நடைபெற்ற ஆடிட்டர் ஆய்வில் தெரியவர, இது குறித்து மதுரை மண்டல மேலாளர் சுரேஷ் குமாரிடம் ஆடிட்டர் புகார் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து மண்டல மேலாளர் சுரேஷ்குமார் நடத்திய விசாரணையில், பணத்தை விரைவில் கட்டிவிடுவதாக மேலாளர் கமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    ஆனால் குறிப்பிட்டபடி பணம் செலுத்த தவறியதால் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனாவிடம், மண்டல மேலாளர் சுரேஷ் குமார் புகார் செய்தார்.

    முன்னாள் மேலாளர் கடலாடி கமல்ராஜ், அங்கு பணியாற்றிய சாயல்குடி ராஜேஸ்வரன்(26), கமுதி சரவணக்குமார் (32), சாயல்குடியை சேர்ந்த அரவிந்தராஜ், ராஜேஸ்வரி ஆகிய 5 பேர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது.

    எஸ்.பி.உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் பரம குருநாதன் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×