search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: 4-ந்தேதி முதல் 3 நாட்கள் கனமழை
    X

    புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: 4-ந்தேதி முதல் 3 நாட்கள் கனமழை

    தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதால் தமிழகத்தில் 4-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #TNRains #IMD
    சென்னை:

    அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை நோக்கி வீசும் காற்று காரணமாக தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி (வியாழக்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    இதன் காரணமாக தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்யத் தொடங்கும். 4, 5, 6-ந்தேதிகளில் 3 நாட்களுக்கு மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-


    தென் கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. அதன் காரணமாக 4-ந்தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், 5-ந்தேதி வட தமிழகத்திலும், உள் மாவட்டங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் இன்றும், நாளையும் லேசாக மழை பெய்யும். 4, 5, 6-ந்தேதிகளில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNRains #IMD
    Next Story
    ×