search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரியில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
    X

    நீலகிரியில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின

    நீலகிரியில் தொடர் மழை மற்றும் கடுங்குளிரால் சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடுங்குளிர் பொதுமக்களை வாட்டி வருகிறது. அடர்த்தியான மேக மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டவாறு செல்கின்றன.

    தொடர்மழையால் நீலகிரியில் உள்ள பைக்காரா, காமராஜர் சாகர், குந்தா, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர் பவானி, டைகர் ஹில்ஸ் உள்ளிட்ட 14 அணைகளும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காட்டேரி, கல்லட்டி, கேத்ரின் உள்ளிட்ட நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தொடர் மழை மற்றும் கடுங்குளிரால் சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமலும், பண்டிகை பொருட்கள் வாங்க முடியாமலும் முடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தீபாவளியை பண்டிகை மழையால் களை இழந்து காணப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று இரவு மேட்டுப்பாளையத்தில் அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    Next Story
    ×