search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளத்தில் மறியல்- சத்துணவு ஊழியர்கள் 65 பேர் கைது
    X

    சாத்தான்குளத்தில் மறியல்- சத்துணவு ஊழியர்கள் 65 பேர் கைது

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தான்குளத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் 65 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சாத்தான்குளம்:

    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தான்குளத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    முன்னதாக தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றியத்தலைவர் அந்தோணி தமிழ்செல்வன் தலைமையில் சங்க ஒன்றியச் செயலாளர் முருகன் முன்னிலையில் கோரிக்கையை வலியுறுத்தி ஊழியர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    பின்னர் இட்டமொழி மெயின் ரோட்டில் சத்துணவு ஊழியர்கள் ஆண்கள், பெண்கள் உள்பட திரளானபேர்கள் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெயபால் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க துணைத்தலைவர் சேசுமணி, வருவாய்த்துறை ஊழியர் சங்கம் சார்பில் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பேசினார்கள்.

    மெயின் பஜாரில் சாலை மறியல் செய்த சத்துணவு ஊழியர்கள் கோ‌ஷம் போட்டனர். பின்பு மறியலில் ஈடுபட்ட பெண் ஊழியர்கள் 57 பேர் உள்பட 65 பேரை சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசுந்தர் கைது செய்தார். #tamilnews
    Next Story
    ×