search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

    பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோஜியோ கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #JactoGeo
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஜாக்டோஜியோ கூட்டமைப்பு சார்பாக  ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்பட வேண்டும், சத்துணவு, ஊராட்சி செயலாளர், அங்கன்வாடி மையப்பணியாளர்கள், வனக்காவலர் முதலிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்பட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்தநிலையில்  பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தயாளன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரிகள் ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ராமர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் அருள்ஜோதி ஆகியோர்  தலைமை வகித்தனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் மரியதாஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமரிஅனந்தன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்க மாநில துணை தலைவர் கணேசன்,  தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சிலம்பரசன், தமிழ்நாடு கூட்டுறவு அலுவலர்கள் சங்க மாநில துணை தலைவர் சிவக்குமார் மற்றும் பலர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சியம்மாள் நன்றி கூறினார்.

    துறையூரில்  ஜாக்டோ ஜியோ அமைப்பினர் துறையூர் பஸ் நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில்  ஜாக்டோ ஜியோ வட்டார தலைவர் தியாகராஜன் , ஒருங்கிணைப்பாளர் அசோகன்,  கிருஷ்ணமூர்த்தி, அருணகிரி, பழனிச்சாமி, சந்திர சேகரன, நேரு உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளார் செபஸ்தியான் தலைமை வகித்தார்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  ராஜேந்திரன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மணியன், சத்துணவு மாவட்ட பொருளாளர் அன்னப்பூரணி  ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரமாநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். #JactoGeo
    Next Story
    ×