search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ கல்வி உதவித்தொகை - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
    X

    கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ கல்வி உதவித்தொகை - மு.க.ஸ்டாலின் வழங்கினார்

    கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவ கல்வி உதவித்தொகையாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். #MKStalin
    சென்னை:

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக மறைந்த கருணாநிதி ஏற்கனவே தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கிய ரூ.4 கோடி வங்கியில் போடப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் வட்டி பணம் மருத்துவம், கல்வி உதவி தொகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஆகஸ்டு மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் இருந்து மருத்துவ-கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு காசோலையாக தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். #MKStalin

    Next Story
    ×