search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் 18-ந்தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க வேண்டும்
    X

    கோவையில் 18-ந்தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க வேண்டும்

    கோவையில் 18-ந்தேதி நடைபெறும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க வேண்டும் என்று அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வடகோவையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

    குட்கா ஊழலில் டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வலியுறுத்தி, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகளும், செயல்வீரர்களும், அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்துவது,

    விழுப்புரத்தில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் கோவை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதி, வட்டக் நிர்வாகிகளும், செயல்வீரர்களும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் திரளாகப் பங்கேற்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் “குளங்கள் மேம்படுத்துதல் திட்டம்” என்னும் பெயரில் குளக்கரைகளை வலுப்படுத்தும் போது குளங்களில் நீர் நிறுத்தும் இடத்தின் பரப்பளவைக் குறைக்கக் கூடாது. அப்படி குளங்களில் உள்ள பரப்பளவைக் குறைத்து நீதிமன்றங்களின் ஆணைகளுக்கு எதிராக கோவை மாநகராட்சி நிர்வாகம் செயல்பட்டால், கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மெட்டல் மணி, நாச்சிமுத்து, நந்தகுமார், குப்புசாமி, குமரேசன், உமாமகேஸ்வரி, பகுதி செயலாளர்கள் சண்முக சுந்தரம், கணபதி லோகு, மார்க்கெட் மனோகரன், கோவிந்தராஜ், எஸ்.எம்.சாமி, வக்கீல்கள் பி.ஆர்.அருள்மொழி, கணேஷ் குமார், இளைஞர் அணி கோட்டை அப்பாஸ், பூபாலன், தம்பு மற்றும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×