search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பெயர் சேர்ப்பு பணியில் திமுகவினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும்- சுரேஷ்ராஜன் வேண்டுகோள்
    X

    வாக்காளர் பெயர் சேர்ப்பு பணியில் திமுகவினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும்- சுரேஷ்ராஜன் வேண்டுகோள்

    18 வயது நிரம்பிய வாக்காளர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க திமுகவினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 1-1-2019-ந் தேதியை 18 வயது தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள், முகவரி மாற்றம் செய்யவும் நேற்று முதல் அக்.31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி படிவம் எண் 6 வாக்காளர் பெயர் சேர்த்தல், படிவம் 7 பெயர் நீக்கம் செய்தல், படிவம் 8ஏ பிழை திருத்தல், முகவரியில் தவறு இருந்தால், வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வோர் திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் வரும் 9, 23, அக்டோபர் 7, 14 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.

    எனவே அந்தந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைக்கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் இப்பணியில் ஈடுபட்டு 18 வயது நிரம்பிய வாக்காளர்களை விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இப்பணிகள் குறித்த விவரங்களை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஒப்படைக்கவும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×