search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கி உயிரிழந்த திருப்பூர் வாலிபர் உடல் உறுப்புகள் தானம்
    X

    விபத்தில் சிக்கி உயிரிழந்த திருப்பூர் வாலிபர் உடல் உறுப்புகள் தானம்

    திருப்பூரில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் திருமுருகன் பூண்டி திரு நீலகண்டர் வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (27) சிற்ப கலைஞர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஹேமலதா (6) கிருத்திகா (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 15-ந் தேதி சிற்ப கூடத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற தேவராஜ் எதிரே வந்த லாரி மோதி படுகாயம் அடைந்தார். அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தேவராஜூக்கு பக்கவாதம் பாதிப்பு ஏற்படவே உடல் நிலை மோசமானது. இதனை தொடர்ந்து பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு தேவராஜ் மூளை சாவு ஏற்பட்டு உயிர் இழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். குறைந்த வயதில் மூளை மட்டும் செயல் இழந்ததால் மற்ற உறுப்புகளை தானமாக வழங்கலாம் என டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து தேவராஜின் கண்கள், இதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.

    பிரேத பரிசோதனைக்கு பின் தேவராஜ் உடல் திருப்பூர் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேவராஜின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூறியதாவது-

    தேவராஜின் உடல் உறுப்புகள் 6 பேரின் உயிரை காப்பாற்றி உள்ளது. மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய குடும்பத்தினரின் செயல் பாராட்டுக்கு உரியது.

    தேவராஜின் மனைவி அல்லது குழந்தைகளுக்கு அரசு உதவி செய்தால் அந்த குடும்பத்தின் எதிர் காலத்துக்கு உதவும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
    Next Story
    ×