என் மலர்
நீங்கள் தேடியது "Tirupur youth"
- போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வரவே அவரை மீட்டு விசாரித்தனர்.
- வழக்கில் 35 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு 41 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலசொக்கநாதபுரம்:
திருப்பூரை சேர்ந்தவர் முகமதுரியாஸ் (வயது27). இவர் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகில் உள்ள மறையூரை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தார்.
இவர்கள் நட்பு அதிகரித்த நிலையில் தனது குடும்ப சூழ்நிலையை சிறுமி தெரிவித்து ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி உள்ளார். அப்போது திருப்பூருக்கு வந்தால் வேலை வாங்கி தருவதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் சிறுமியை வரவழைத்து கூட்டம் அதிகம் இல்லாத தியேட்டருக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் தன்னுடனே அவர் தங்க வைத்துள்ளார். இதனிடையே சிறுமி மாயமானதை தொடர்ந்து அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வரவே அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தன்னை வேலைக்கு வரச்சொல்லி முகமது ரியாஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கேரள போலீசார் முகமது ரியாசை கைது செய்தனர். இந்த வழக்கு இடுக்கி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் 35 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு 41 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணை முடிந்த நிலையில் முகமது ரியாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்ட சேவை வாரியம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
திருப்பூர் திருமுருகன் பூண்டி திரு நீலகண்டர் வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (27) சிற்ப கலைஞர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஹேமலதா (6) கிருத்திகா (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 15-ந் தேதி சிற்ப கூடத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற தேவராஜ் எதிரே வந்த லாரி மோதி படுகாயம் அடைந்தார். அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தேவராஜூக்கு பக்கவாதம் பாதிப்பு ஏற்படவே உடல் நிலை மோசமானது. இதனை தொடர்ந்து பெங்களூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தேவராஜ் மூளை சாவு ஏற்பட்டு உயிர் இழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். குறைந்த வயதில் மூளை மட்டும் செயல் இழந்ததால் மற்ற உறுப்புகளை தானமாக வழங்கலாம் என டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தேவராஜின் கண்கள், இதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
பிரேத பரிசோதனைக்கு பின் தேவராஜ் உடல் திருப்பூர் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேவராஜின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூறியதாவது-
தேவராஜின் உடல் உறுப்புகள் 6 பேரின் உயிரை காப்பாற்றி உள்ளது. மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய குடும்பத்தினரின் செயல் பாராட்டுக்கு உரியது.
தேவராஜின் மனைவி அல்லது குழந்தைகளுக்கு அரசு உதவி செய்தால் அந்த குடும்பத்தின் எதிர் காலத்துக்கு உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews






