search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்டத்தில் போலீசாருடன் ரோந்து செல்ல 1148 இளைஞர்கள் தேர்வு
    X

    வேலூர் மாவட்டத்தில் போலீசாருடன் ரோந்து செல்ல 1148 இளைஞர்கள் தேர்வு

    வேலூர் மாவட்டத்தில் போலீசாருடன் ரோந்து செல்ல 1,148 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருவிழா, பொதுக்கூட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல், சூதாட்டம், கள்ளச்சாராய விற்பனை மற்றும் குற்றச்சம்பவங்களை அடியோடு ஒழித்து கட்ட பிரவேஷ்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

    ரோந்து செல்லும் போலீசார் பற்றக்குறையால் தனியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தப்பி சென்று விடுகின்றனர்.

    போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட அந்தந்த பகுதியில் உள்ள படித்த இளைஞர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு போலீஸ் நிலையத்துககு 25 பேர் என மாவட்டம் முழுவதும் 1148 படித்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த போலீஸ் நிலையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மணல் கடத்தல், சூதாட்டம், கள்ளச்சாராயம் குறித்து இவர்கள் போலீசுக்கு ரகசிய தகவல் தெரிவிப்பார்கள். மேலும் போலீசாருடன் தினமும் இரவு ரோந்து செல்வார்கள். திருவிழா, பொதுக்கூட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×