search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூரில் காய்கறி வியாபாரியிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்தவர் கைது
    X

    ஓசூரில் காய்கறி வியாபாரியிடம் ரூ.38 லட்சம் மோசடி செய்தவர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காய்கறி வியாபாரியிடம் ரூ. 38 லட்சம் மோசடி செய்த, மற்றொரு காய்கறி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 47). காய்கறி வியாபாரி. அதே பகுதியில் உள்ள நரசம்மா காலனியை சேர்ந்தவர் எல்லப்பா(60). இவரும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வந்ததால் இருவருக்கும் இடையே நட்பு இருந்து வந்தது.

    இந்த நிலையில் எல்லப்பா அடிக்கடி மஞ்சுநாத்திடம் பணம் வாங்குவதும், கொடுப்பதுமாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு 21-ந் தேதி முதல் அதே ஆண்டு ஜூன் 19-ந் தேதி வரை மூன்று தவணையாக ரூ. 38 லட்சத்தை எல்லப்பா, மஞ்சுநாத்திடமிருந்து கடனாக பெற்றுள்ளார். அவ்வாறு பெற்ற கடனை திருப்பி கேட்கும் போதெல்லாம், கொடுத்து விடுகிறேன் என்று கூறி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் வங்கி காசோலை 3 கொடுத்து, வங்கியில் இருந்து பணம் எடுத்துகொள்ளுமாறு எல்லப்பா கூறினார். ஆனால் வங்கியில் காசோலையை செலுத்திய போது தான், அந்த வங்கியில் அவரது கணக்கை முடித்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து எல்லப்பாவிடம், மஞ்சுநாத் கேட்டபோது, பணத்தை கொடுக்க மறுத்ததுடன், மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து மஞ்சுநாத் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையத்பாஷா வழக்குப்பதிவு செய்து, எல்லப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    Next Story
    ×