search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் கனமழை - பொள்ளாச்சி, பாலக்காடு சாலை மூடல்
    X

    கேரளாவில் கனமழை - பொள்ளாச்சி, பாலக்காடு சாலை மூடல்

    கேரளாவில் கனமழை பெய்து வருவதையொட்டி பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு செல்லும் வழித்தடங்கள் சேதம் ஆனாதால் பொள்ளாச்சி- பாலக்காடு சாலையை போலீசார் மூடிவிட்டனர். #KeralaFloods2018
    கொழிஞ்சாம்பாறை:

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத வகையில் பெய்யும் கனமழைக்கு இதுவரை ஏராளமானோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சாலை, பாலம், ரெயில் தண்டவாளம், மின் கம்பங்கள் சேதமடைந்தன.

    குறிப்பாக கடந்த 48 மணி நேரம் பெய்த பேய் மழையால் பாலக்காடு மாவட்டம் தண்ணீரில் தத்தளிக்கிறது. நீர் வரத்து அதிகரிப்பால் மலம்புழா அணையின் ‌ஷட்டர் 9 செ.மீட்டர் திறக்கப்பட்டது. நேற்று 9 செ.மீட்டரில் இருந்து திடீரென 36 செ.மீட்டர் திறக்கப்பட்டு தற்போது 45 செ.மீட்டருக்கு ‌ஷட்டர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறி கல்பாத்தி ஆற்றில் ஓடுகிறது. கல்பாத்தி ஆற்றையொட்டி இருந்த 80 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது.

    இது தவிர ஆழியாற்றில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால் சித்தூர் தாலுகாவில் உள்ள அனைத்து பாலங்கள் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் வெள்ளம் கிராமங்களை நோக்கி ஓடுகிறது. கிராமங்களில் பயிரிட்ட 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இது தவிர 30 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு செல்லும் வழித்தடங்கள் சேதம் ஆனாதால் பொள்ளாச்சி- பாலக்காடு சாலையை போலீசார் மூடிவிட்டனர். இதனால் எங்கு வழி உள்ளதோ அதில் பஸ் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. தொடர் மழையால் கடந்த 2 நாட்களாக மின் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது.

    இன்னும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால் பாலக்காடு நகர மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

    பாலக்காடு கலெக்டர் பாலமுரளி பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். கனமழை பெய்வதால் சுற்றுலா பயணிகள் பாலக்காடு வரவேண்டாம் என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். #KeralaFloods2018
    Next Story
    ×