search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிப்பு
    X

    அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிப்பு

    அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
    அரியலூர்:

    அரியலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் செந்துறை சாலை வழியாக சென்று அரியலூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் அப்துல்கலாம் பொன்மொழி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கருணாகரன் செய்திருந்தார்.

    இதேபோல் அரியலூர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். ஆர்.எஸ்.மாத்தூர் பஸ் நிலையம் அருகே 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி மற்றும் மக்களாட்சி பேரவை சார்பில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். அரியலூர் ஒன்றியம் கல்லக்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அப்துல்கலாம் உருவப்படம் முன்பு பள்ளி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

    ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பணி புரிகின்ற ஆட்டோ, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சார்பில் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் ஜெயங்கொண்டம் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளிலும் அரசு சார்ந்த அலுவலகங்களிலும் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
    Next Story
    ×