search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரசாயனம் தடவிய மீன்கள் தமிழகத்திற்குள் வரவில்லை- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
    X

    ரசாயனம் தடவிய மீன்கள் தமிழகத்திற்குள் வரவில்லை- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

    வெளி மாநிலங்களில் இருந்து ரசாயனம் தடவிய மீன்கள் தமிழகத்திற்குள் வரவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    ரசாயனம் தடவிய மீன் விற்பனைக்கு வருகிறதா? அதை தடுக்க அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    தமிழகத்திற்கு வரும் மீன்களில் ரசாயனம் உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை அல்ல.

    ஏனென்றால் வெளிமாநிலங்களில் இருந்து புழல் காவாங்கரை, வானகரம் மீன்மார்க்கெட்டுக்கு வரும் மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் அதற்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை. மீன்களில் ரசாயனம் எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.

    எனவே தேவையில்லாமல் வீண் வதந்தி பரப்பப்படுகிறது. யாரும் பீதி அடைய தேவையில்லை. அச்சப்பட வேண்டாம்.

    தமிழகத்தை பொறுத்த வரை கடலில் பிடிக்கப்படும் மீன்கள் உடனுக்குடன் விற்பனையாகி விடுகிறது. மீன்கள் கெடாமல் இருப்பதற்காக கெமிக்கல் தடவ வேண்டிய அவசியம் இல்லை.

    மீன்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு குளிர்சாதன வசதி கொண்ட இன்சுலேட்டர் வேன்கள் உள்ளது. ஐஸ் பெட்டிகளும் உள்ளன. இதில் தரமான ‘ஐஸ்’ உபயோகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மீன்பிடி துறைமுகங்களிலும் அதிகாரிகள் மீன்களின் தரத்தை சோதனையிடுகின்றனர். இதில் எந்த அறிகுறியும் காணப்படவில்லை.

    மீன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆரோக்கியமானதாகும். எனவே பொதுமக்கள் அச்சப்படாமல் மீன்களை வாங்கி சாப்பிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×