search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரியமாணிக்கபுரம் பாலத்தில் விபத்து: ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி பலி
    X

    கரியமாணிக்கபுரம் பாலத்தில் விபத்து: ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி பலி

    பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    என்.ஜி.ஓ. காலனி:

    சுசீந்திரம் கவிமணி நகரைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 72). இவர் தூத்துக்குடியில் முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் இன்று காலை சுசீந்திரத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரது பின்னால் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பஸ் ஒன்று பயணிகளுடன்  வந்தது. 

    கரியமாணிக்கபுரம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது அந்த பஸ்சின் பின்பக்கம் திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சிவகுமார் தூக்கி வீசப்பட்டு நடுரோட்டில் விழுந்தார். அவரது தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே சிவகுமார் துடிதுடித்து இறந்தார். 

    இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசாரும், கோட்டார் போலீசாரும் அங்கு வந்தனர். விபத்து நடந்தது எந்த இடம்? எனபதில் அவர்களுக்கிடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக சிவகுமார் உடலை மீட்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. 

    தொடர்ந்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கை பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் சசி, ஜெயகுமார் ஆகியோர் விரைந்து சென்று பலியான சிவகுமாரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போக்குவரத்து போலீசாரும் அங்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். அதன்பிறகே போக்குவரத்து நெரிசல் குறைந்தது. 

    சிவகுமாரின் மகன் சுப்பிரமணிய பிள்ளை. இவர் தாழக்குடியில் அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறார். சிவகுமார் பலியானதை அறிந்த அவரும், அவரது குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    Next Story
    ×