search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு- கலெக்டர் அறிவிப்பு
    X

    விருதுநகரில் அரசு பணியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு- கலெக்டர் அறிவிப்பு

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள தேர்வுகளுக்கு விருதுநகரில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் கலெக்டர் சிவஞானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ள குரூப்-மிமி எஸ்.எஸ்.சி. (சி.ஜி.எல்.) ஆகிய தேர்வுகளுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு வருகிற 7-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

    பணியாளர் தேர்வு வாரியத்தால் எஸ்.எஸ்.சி. (சி.ஜி.எல்.)உதவி தணிக்கை அலுவலர், உதவிக் கணக்காயர், வருமான வரி ஆய்வாளர் மற்றும் பல பதவிகளை உள்ளடக்கிய தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற 4-ந் தேதி ஆகும்.

    வயது வரம்பு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தில் இக்காலியிட அறிவிப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

    தேர்விற்குரிய இலவசப் பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக வருகிற 9-ந் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது.

    மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (குரூப்-மிமி) சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், உதவி ஆய்வாளர் மற்றும் வருவாய் உதவியாளர் ஆகிய பதவிகளை உள்ளடக்கிய 1,547 பணிக்காலியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    இதற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். இத்தேர்விற்குரிய இலவசப் பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக வருகிற 7-ந் தேதி முதல் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

    இவ்விரண்டு இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கும் வாரம் ஒரு மாதிரி தேர்வு நடைபெறும். மேற்காணும் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அல்லது விண்ணப்பிக்கவுள்ள விருதுநகர் மாவட்ட பதிவு தாரர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தின் நகல் ஆகியவற்றுடன் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து தங்களது பெயரைப் பதிவு செய்து பயனடையலாம்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×