search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பாறை மீது வேன் மோதி 18 சுற்றுலா பயணிகள் காயம்
    X

    மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பாறை மீது வேன் மோதி 18 சுற்றுலா பயணிகள் காயம்

    மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் பாறை மீது வேன் மோதி 18 சுற்றுலா பயணிகள் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்தவர் ஏழுமலை (51). ஜம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது உறவினர்கள், நண்பர்கள் 23 பேருடன் வேனில் ஊட்டிக்கு வந்தார். ஊட்டியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள் நேற்று மாலை ஊருக்கு புறப்பட்டனர்.

    வேனை சித்தப்பட்டினத்தை சேர்ந்த வெங்கேடஷ் (45) ஓட்டி வந்தார். வேன் நேற்று இரவு 8.30 மணியளவில் ஊட்டி- மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியாறு பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த பாறை மீது மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்தவர்கள் இடி பாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். வேனில் இருந்த 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு-

    ஏழுமலை (51), அவரது மகன் ராகவன் (10), சந்தோஷ் (18), பூஜா (16), கே.ஏழுமலை (35), நவீத் (17), ஜனனி (5),ஜெயா (25), நமிஷா பேகம் (27), பாரதி (27),மாதவன் (10), நிவாஷ் (4),சந்திர சேகர் (31),அருண் குமார் (30), சத்யா (29), பூர்ணேஷ் (12), முருகன் (49), பரதன் (41).விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்த 18 பேரையும் 108 மற்றும் தனியார் ஆம்புலன்சில் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர்களில் பலத்த காயம் அடைந்த ஜனனி, அருண் குமார், முருகன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×