search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அம்மா உணவகத்தில் கலெக்டர் அதிரடி சோதனை
    X

    தேனி அம்மா உணவகத்தில் கலெக்டர் அதிரடி சோதனை

    தேனி அம்மா உணவகத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் திடீரென ஆய்வு செய்தார்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் பராமரித்து வரும் தேனி பழைய பஸ் வளாக பகுதியில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஸ் நிலையத்திற்கு வந்து செல்லக்கூடிய பஸ்கள் வழித்தடங்களையும், பூ மார்க்கெட் பகுதி, வாகனங்கள் நிறுத்தும் இடம், அம்மா உணவகம், ஆட்டோக்கள் நிறுத்தும் இடம், பழக்கடைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை கலெக்டர் பல்லவிபல்தேவ் பார்வையிட்டார்.

    ஆய்வின் போது பஸ் நிலைய பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். பஸ் நிலைய வளாகத்தில் கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக பராமரிக்க வேண்டும். சாலையில் உள்ள மின்விளக்குகள், போக்கு வரத்து சிக்னல்களை இடையூறு இல்லாமல் அமைக்க வேண்டும்.

    நடை பாதையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக பராமரிப்பதுடன், சி.சி.டி.வி கேமராக்கள் வைத்து பஸ் நிலைய பகுதியை கண்காணிக்க வேண்டும். அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் சுத்தமாகவும், சுகாதார மாகவும், சுவை மாறாமல் வழங்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அப்போது டி.ஆர்.ஓ.கந்தசாமி, நகராட்சி ஆணையாளர் ராஜ்குமார், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×