search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector study"

    • மல்லாங்கிணர்-அருப்புக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
    • அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பேரூராட்சி மற்றும் அருப்புக்கோட்டை வட்டாரப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மல்லாங்கிணர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.82.30 லட்சம் மதிப்பில் சின்னக் குளம் ஊரணி மேம்பாட்டு பணிகளையும், கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.148 லட்சம் மதிப்பில் திம்மன் பட்டி சாலை பொது மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளையும், வளமீட்பு பூங்காவில் 15-வது நிதிக்குழு மான்யத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பில் உரம் தயாரிக்கும் உலர்களம் அமைக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் வளமீட்பு பூங்கா வில் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் ரூ.23.30 லட்சம் மதிப்பில் உரம் தயாரிக்கும் உலர்களம் அமைக்கும் பணிகளையும், முடியனூர் காலனியில் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பறை பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர், மல்லாங் கிணரில் உள்ள சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து சீட்ஸ் நிறுவ னத்தினுடைய கொள்முதல் கிட்டங்கி விவசாயி களுடைய விளைபொருட்களை தரம் பிரித்தல், மதிப்பு கூட்டல், விற்பனை செய்தல் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

    அருப்புக்கோட்டை வட்டம் கோபாலபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் செயல்பட்டு வரும் அரவை முகவை விஸ்வேஸ்வரா அரிசி அரவை ஆலையினை பார்வையிட்டு ஆய்வு செய்து உற்பத்தி முறைகள், தரம் குறித்து கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து கோபாலபுரம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவ முறைகள், மருந்து இருப்பு, நோயாளிகள் குறித் தும் அவர் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் விஜயகுமார், மல்லாங்கிணர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழ கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • கரையோர மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரி க்கை விடுக்கப்ப ட்டுள்ளது.
    • இதனால் இந்த ஆறுகளில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கின.

    விழுப்புரம்:

    கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையினால் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பிவிட்டது. அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் பெண்ணையாற்றில் நீர் கரைபுரண்டு ஒடுகிறது. இதனால் கரையோர மக்க ளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரி க்கை விடுக்கப்ப ட்டுள்ளது. பெண்ணை யாற்றில் வரும் நீர் திருக்கோ விலூரில் உள்ள அணையில் தேக்கி வைக்க ப்படுகிறது. இந்த அணையும் நிரம்பிவி ட்டதால் உபரிநீர் பெண்ணை யாறு, கோரையாறு, மலட்டாறு, பம்பை, நரியாறு உள்ளிட்ட ஆறுக ளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆறுகளில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கின. இந்நிலையில் விழுப்பு ரம் மாவட்டம் திருவெ ண்ணைநல்லூர் அருகே யுள்ள டி.இடையார் கிராம த்தில் வீடு கட்டும் பணிக்கு கொத்தனார் வேலை செய்து விட்டு 3 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி னர் அப்போது கொங்க ராயனூர்-அறள வாடி இணைப்பு தரைப்பா லத்தில் சென்ற போது பாசி வழுக்கி ஆற்றில் விழுந்தனர். அதில் கார்த்திகேயன் (வயது 38) கிராம மக்களால் மீட்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே யுள்ள அத்தியூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்த ரகு (வயது 30), காத்தவராயன் (வயது 32) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளுடன் ஆற்றில் அடித்து செல்லப்ப ட்டனர்.

    இத்தகவலறிந்த திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு படையை சேர்ந்த 6 வீரர்கள் நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரையும் கடந்த 2 நாட்களாக தேடி வருகின்றனர். மேலும், உடனடியாக சம்பவ இடத்திற்கு சப் கலெக்டர் சித்ரா விஜயன், தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலி பேக் தலைமையிலான வரு வாய் துறையினர் மற்றும போலீசார் நேற்றே சம்பவ இடத்திற்கு விரைந்த னர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில், மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீநாதா, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் கொங்கராயனூர் கிராம த்திற்கு இன்று காலை ஆய்வுக்கு வந்தனர். அப்போது அங்கிருந்த சப் கலெக்டர் சித்ரா விஜயன், தாசில்தார் பாஸ்கரதாஸ், இன்ஸ்பெக்டர் செல்வ குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலிபேக் ஆகியோரிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் சுந்தர்ரா ஜனை அழைத்த கலெக்டர் மோகன், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேரையும் தேடும் பணியை தீவிரப்படுத்தவும், இன்று மாலைக்குள் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் அறி வுறுத்தினார். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தரைப்பாலங்கள், மேம்பாலங்களை ஆய்வு செய்தார்.

    • சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தனர்.
    • இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர், செயற்பொறியாளர் சக்திமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலருமான ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் துலுக்கப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.11.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளையும், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்து, கற்பிக்கும் முறைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தனர்.

    பின்னர், ரெங்கப்பநாய க்கன்பட்டியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.5.49 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளையும், படந்தாலில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் ஊத்துகோட்டையில் உள்ள 69 தனியார் பள்ளிகளில், வேன், பஸ் என மொத்தம் 259 வாகனங்கள் உள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார்பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடை பெற்று வருகிறது.

    அதன்படி திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் இன்று ஆய்வு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன்.

    திருவள்ளூர் வட்டாட்சியர் ஸ்ரீனிவாசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களின் முதலுதவிப் பெட்டி, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துதல், அவசரகாலக் கதவு, ஜன்னல்கள், தீயணைப்புக் கருவிகள், புத்தகப்பை வைக்கும் அடுக்கு உள்பட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

    வாகனங்களுக்கு உரிமம் உள்ளதா, ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா? மற்றும் வாகனங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். இப்பணி வரும் 31-ந் தேதி வரை நடைபெறும். பள்ளி துவங்கியதும் அனுமதியின்றி இயங்கும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மதுரை மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை கமி‌ஷனர் அனீஷ் சேகர் இன்று ஆய்வு மேற் கொண்டார்.

    மதுரை:

    மேலவாசல் பகுதியில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எயந்திரத்தினையும், மேல வாசல் முதல் திடீர் நகர் வரையுள்ள மழைநீர் வடிகாலில் ரூ.6.05 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சிலாப்புக்கள் அமைக்கப்பட்ட பணியினையும், பேச்சியம்மன் படித்துறை கோவில் மற்றும் தளவாய் அக்ரஹாரம் பகுதியில் உள்ள மழைநீர் வாய்க்காலில் ரூ.3.45 லட்சம் மதிப்பீட்டில் இரும்பு மூடிகள் அமைக்கப்பட்டுள்ளதையும், கமி‌ஷனர் ஆய்வு செய்தார்.

    வடக்கு மாசி வீதியில் ரூ.28.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முத்து சாரதா நவீன ஸ்கேன் மையத்தினையும் ஆய்வு செய்தார்.

    மேலும் தெற்கு வெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்ட போது பள்ளியின் பின்புறம் உள்ள வாய்க்காலில் சுற்றுச்சுவர் அமைத்து தருமாறும், மாணவிகள் மிதிவண்டியினை நிறுத்துவதற்கு ஏதுவாக மேற்கூரை அமைத்து தருமாறும் கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுச்சுவர், பேவர் பிளாக் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதையும், ரெயில் நிலையத்தில் இருந்து டவுண்ஹால்ரோடு வழியாக திருமலை நாயக்கர் மகால் வரை ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய நடைபாதை பேவர் பிளாக் சாலை பணியினையும் ஆய்வு செய்தார்.

    டவுண் ஹால் ரோடு பகுதியில் சேதமடைந்துள்ள பேவர் பிளாக் கினை உடனடியாக சரி செய்யுமாறும், மழை நீர் வாய்க்காலில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணியினை விரைவில் முடிக்குமாறு உத்தர விட்டார்.

    ஆய்வின் போது உதவி ஆணையாளர் பிரேம்குமார், செயற்பொறியாளர்சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் வினய் ஆய்வு மேற்கொண்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் பழமையான ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்க திட்ட பிரதான மற்றும் பகிர்மான குழாய்களை புனரமைப்பு செய்து தினசரி குடிநீர் வழங்கும் வகையில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு இணைய நிதி மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி நிதியின் கீழ், ரூ.70.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 6 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 3 எண்ணம் மற்றும் 10 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி 1 எண்ணம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆத்தூர் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து 22 கி.மீ நீளத்திற்கு பிரதான குழாய் பதிக்கும் பணி, 235 கி.மீ நீளத்திற்கு பகிர்மான குழாய் பதிக்கும் பணி மற்றும் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 98 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது. இத்திட்டம் முடிவுற்றபின் நகருக்கு தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், சாலை வசதியை பொருத்தவரையில் தமிழ்நாடு நகர்புறச்சாலை உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம் - 2017-18ன் கீழ் 18.00 கி.மீ நீளமுள்ள தார்சாலை, 4.00 கி.மீ நீளமுள்ள பேவர்பிளாக் கற்கள் சாலை என மொத்தம் 22.00 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.11 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு, பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் அபிவிருத்தி பணிகளால் சேதாரமடைந்த சாலைகள் மற்றும் நகரின் முக்கிய சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும், திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் காய்கறி கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையம் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித்திட்டம் 2013-14ன் கீழ், செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட பசவகல் பகுதியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ஒரு பயனாளிக்கு ரூ.1.70 வீதம் ரூ.3.40 லட்சம் மதிப்பில் 300 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் 2 வீடுகளையும், குருத்துக்குளி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 40 மீட்டர் நடைபாதை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் பொதுசுகாதாரம் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட கல்லக்கொரை, மற்றும் நஞ்சநாடு மேல்நிலைப்பள்ளி அருகில் சாய்வான பகுதியில் மரம் வளர்வதற்கு ஏதுவாக நீர்குழி அமைக்கும் பணியினை பார்வையிட்டார். இந்த நீர்குழிகள் அமைத்தல் மூலம் மழை காலங்களில் மழைநீர் வீணாகாமல் மரம், செடி, கொடிகள் வளர பயன்பெறும்.

    இந்த ஆய்வின் போது ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ராமன், நாகராஜ், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×