search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள்- கமி‌ஷனர் அனீஷ்சேகர் ஆய்வு
    X

    மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள்- கமி‌ஷனர் அனீஷ்சேகர் ஆய்வு

    மதுரை மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை கமி‌ஷனர் அனீஷ் சேகர் இன்று ஆய்வு மேற் கொண்டார்.

    மதுரை:

    மேலவாசல் பகுதியில் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எயந்திரத்தினையும், மேல வாசல் முதல் திடீர் நகர் வரையுள்ள மழைநீர் வடிகாலில் ரூ.6.05 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சிலாப்புக்கள் அமைக்கப்பட்ட பணியினையும், பேச்சியம்மன் படித்துறை கோவில் மற்றும் தளவாய் அக்ரஹாரம் பகுதியில் உள்ள மழைநீர் வாய்க்காலில் ரூ.3.45 லட்சம் மதிப்பீட்டில் இரும்பு மூடிகள் அமைக்கப்பட்டுள்ளதையும், கமி‌ஷனர் ஆய்வு செய்தார்.

    வடக்கு மாசி வீதியில் ரூ.28.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முத்து சாரதா நவீன ஸ்கேன் மையத்தினையும் ஆய்வு செய்தார்.

    மேலும் தெற்கு வெளி வீதியில் உள்ள ஈ.வெ.ரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்ட போது பள்ளியின் பின்புறம் உள்ள வாய்க்காலில் சுற்றுச்சுவர் அமைத்து தருமாறும், மாணவிகள் மிதிவண்டியினை நிறுத்துவதற்கு ஏதுவாக மேற்கூரை அமைத்து தருமாறும் கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுச்சுவர், பேவர் பிளாக் மற்றும் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதையும், ரெயில் நிலையத்தில் இருந்து டவுண்ஹால்ரோடு வழியாக திருமலை நாயக்கர் மகால் வரை ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய நடைபாதை பேவர் பிளாக் சாலை பணியினையும் ஆய்வு செய்தார்.

    டவுண் ஹால் ரோடு பகுதியில் சேதமடைந்துள்ள பேவர் பிளாக் கினை உடனடியாக சரி செய்யுமாறும், மழை நீர் வாய்க்காலில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணியினை விரைவில் முடிக்குமாறு உத்தர விட்டார்.

    ஆய்வின் போது உதவி ஆணையாளர் பிரேம்குமார், செயற்பொறியாளர்சேகர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×