search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் கலெக்டர் ஆய்வு
    X

    திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் கலெக்டர் ஆய்வு

    திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் ஊத்துகோட்டையில் உள்ள 69 தனியார் பள்ளிகளில், வேன், பஸ் என மொத்தம் 259 வாகனங்கள் உள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார்பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடை பெற்று வருகிறது.

    அதன்படி திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் இன்று ஆய்வு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன்.

    திருவள்ளூர் வட்டாட்சியர் ஸ்ரீனிவாசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களின் முதலுதவிப் பெட்டி, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துதல், அவசரகாலக் கதவு, ஜன்னல்கள், தீயணைப்புக் கருவிகள், புத்தகப்பை வைக்கும் அடுக்கு உள்பட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

    வாகனங்களுக்கு உரிமம் உள்ளதா, ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா? மற்றும் வாகனங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். இப்பணி வரும் 31-ந் தேதி வரை நடைபெறும். பள்ளி துவங்கியதும் அனுமதியின்றி இயங்கும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×