என் மலர்

  நீங்கள் தேடியது "Tiruvallur District"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார்.

  திருவள்ளூர்:

  திருவள்ளூர் மற்றும் ஊத்துகோட்டையில் உள்ள 69 தனியார் பள்ளிகளில், வேன், பஸ் என மொத்தம் 259 வாகனங்கள் உள்ளன.

  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார்பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடை பெற்று வருகிறது.

  அதன்படி திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் இன்று ஆய்வு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன்.

  திருவள்ளூர் வட்டாட்சியர் ஸ்ரீனிவாசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களின் முதலுதவிப் பெட்டி, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துதல், அவசரகாலக் கதவு, ஜன்னல்கள், தீயணைப்புக் கருவிகள், புத்தகப்பை வைக்கும் அடுக்கு உள்பட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

  வாகனங்களுக்கு உரிமம் உள்ளதா, ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா? மற்றும் வாகனங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். இப்பணி வரும் 31-ந் தேதி வரை நடைபெறும். பள்ளி துவங்கியதும் அனுமதியின்றி இயங்கும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை துணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  ஊத்துக்கோட்டை:

  ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்புத்துறை சார்பில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளுக்கான உதடு மற்றும் அன்னப்பிளவு சிகிச்சை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

  திருவள்ளூர் மாவட்டத்தில் 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் கடந்த மாதம் 658 பிரசவங்கள் நடைபெற்றன. ஒரே மாதத்தில் இவ்வளவு பிரசவங்கள் நடைபெறுவது மாநிலத்தியே இதுதான் முதல் முறை. ஒரே மாதத்தில் 658 பிரசவங்கள் பார்த்து திருவள்ளூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

  குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம். அப்படி சிகிச்சை பெற்றால் உயிரிழப்பு ஆபத்து உள்ளது. போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

  இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையல் உள்ளன என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். #TNRain #RedAlert #NDRF

  திருவள்ளூர்:

  கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதையடுத்து டெங்கு மற்றும் தொற்று நோய் பரவாமல் தடுக்க திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  மாவட்டம் முழுவதும் துப்புரவு மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் 1,300 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இன்று திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜட்ஜஸ் காலனி பகுதியில் நடைபெற்ற சுகாதாரப் பணியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திடீர் ஆய்வு செய்தார்.

  அப்போது, அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் டம்ளர்களுடன் கழிவு நீரும் தேங்கியிருந்தது. இதையடுத்து அந்த பள்ளி நிர்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

  திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை பாதிப்புக்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மகேஷ்வரி ரவிக்குமார் கூறியதாவது:-


  வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. இதனால் மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளையும், அசம்பாவிதங்களையும் தடுக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 8 வட்டங்கள், 48 பிர்க்காவில் உள்ள ஒவ்வொரு வார்டு வாரியாகவும், கிராமங்களிலும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அதிக பாதிப்புகள் ஏற்படும் பகுதியாக 39 பகுதிகளும் மிதமான பாதிப்பு ஏற்படும் 8 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

  பேரிடர் தாக்குதலுக்குள்ளாகும் பகுதிகளின் விவரங்கள், பேரிடர் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான வழிமுறைகள், போக்குவரத்து தடங்கள், மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடங்கள் போன்றவை தயார் நிலையில் உள்ளன. மண்டல, வட்டார அளவில் 64 குழுக்களும், மாவட்ட அளவில் பேரிடர் மீட்புப் படையினர் பொன்னேரியில் 42 குழுக்களும், கும்மிடிப்பூண்டி பகுதியில் 22 குழுக்களும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 5 குழுக்களும் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.

  உடைப்புகளை தடுக்கும் வகையில் மணல் மூட்டைகள் தயாராக உள்ளன. பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் கருவி, தண்ணீர் உறிஞ்சும் இயந்திரங்கள், குடிநீர் லாரிகள், ஜெனரேட்டர், கொசு மருந்து புகை தெளிப்பான், பிளீச்சிங் பவுடர், குளோரின், மின்கம்பங்கள், மின் மாற்றிகள், தற்காலிக தங்கும் வளாகங்கள் ஆகியவையும் தயார்நிலையில் உள்ளன. மழைக்காலத் தொற்று நோய்களைக் கண்காணிக்கும் வகையில் 42 மருத்துவக் குழுக்களும் தயாராக உள்ளன.

  உணவுப் பொருள் வழங்கல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள் ஆகிய துறைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை மற்றும் மண்ணெய் ஆகியவை 3 மாதங்களுக்கு தேவையான அளவுக்கு இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  சுகாதாரச் சீர்கேடுகளை சமாளிக்க மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் கூடுதலாக இருப்பில் உள்ளது. பெருமழையால் பாதிக்கப்படுவோரை பாதுகாக்க 108 ஆம்புலன்ஸ் மற்றும் வேன்களும் தயாராக இருக்கிறது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.

  இவ்வாறு கலெக்டர் கூறினார்.

  பேட்டியின்போது உதவி கலெக்டர் ரத்தினா, வட்டாட் சியர் தமிழ்செல்வி, நகராட்சி ஆணையர் முருகேசன், துப்புரவு ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூரில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார்.
  ஊத்துக்கோட்டை:

  ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூரில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக் டர் மகேஸ்வரி ரவிகுமார் தொடங்கி வைத்தார். அப் போது அவர் பேசியதாவது:-

  தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக 6 மாதத்துக்கு ஒருமுறை கோமாரி நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் பசு மற்றும் எருமைகளுக்கான தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.

  திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இதுவரை 14 சுற்று முகாம்கள் முடிந்து தற்போது 15வது சுற்று முகாம் 1-ந் தேதி தொடங்கியது. இது 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

  மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள 84 கால்நடை மருந்தகங்கள், 29 கால்நடை கிளை நிலையங்கள், 5 கால்நடை மருத்துவமனைகள் மூலமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.

  முகாம்களுக்காக கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினரால் 2 லட்சத்து 80 ஆயிரத்து 350 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பு ஊசி போடப்பட உள்ளது. கோமாரி நோய் தடுப்பபூசி முகாம் குறித்து ஏற்கனவே நடைபெற்ற கிராம சபா கூட்டங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் கூறினார். #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிளஸ்-1 பொதுத் தேர்வில் மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 90.85 சதவிகித தேர்ச்சி பெற்று 21 வது இடத்தை பிடித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
  திருவள்ளூர்:

  பிளஸ்-1 பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 344 பள்ளிகளில் 42 ஆயிரத்து 349 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 ஆயிரத்து 473 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 17 ஆயிரத்து 219 மாணவர்களும்.21 ஆயிரத்து 254 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 86.49 சதவீதமும், மாணவிகள் 94.71 சதவிகத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.  மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 90.85 சதவிகித தேர்ச்சி பெற்று 21 வது இடத்தை பிடித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். பிளஸ்1 பொதுத் தேர்வு இந்த ஆண்டு முதல் தேர்வு என்பதால் அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பள்ளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் எ.சுந்தர வல்லி தெரிவித்தார்.
  ×