search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளஸ்-1 பொதுத் தேர்வு- திருவள்ளூர் மாவட்டம் 90 சதவீத தேர்ச்சி
    X

    பிளஸ்-1 பொதுத் தேர்வு- திருவள்ளூர் மாவட்டம் 90 சதவீத தேர்ச்சி

    பிளஸ்-1 பொதுத் தேர்வில் மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 90.85 சதவிகித தேர்ச்சி பெற்று 21 வது இடத்தை பிடித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
    திருவள்ளூர்:

    பிளஸ்-1 பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 344 பள்ளிகளில் 42 ஆயிரத்து 349 பேர் தேர்வு எழுதினர். இதில் 38 ஆயிரத்து 473 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 17 ஆயிரத்து 219 மாணவர்களும்.21 ஆயிரத்து 254 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 86.49 சதவீதமும், மாணவிகள் 94.71 சதவிகத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.



    மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் 90.85 சதவிகித தேர்ச்சி பெற்று 21 வது இடத்தை பிடித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். பிளஸ்1 பொதுத் தேர்வு இந்த ஆண்டு முதல் தேர்வு என்பதால் அடுத்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பள்ளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் எ.சுந்தர வல்லி தெரிவித்தார்.
    Next Story
    ×