search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school vehicle"

    • உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள 125 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
    • வாகனத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்பட்டுள்ளதா, ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதா என பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    உடுமலை :

    தனியாா் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள 125 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    வருவாய் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், டி.எஸ்.பி., தேன்மொழிவேல், உடுமலை மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜெயந்தி, தீயணைப்பு நிலைய அலுவலா் கோபாலகிருஷ்ணன் மற்றும் கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோா் இந்த பணிகளை மேற்கொண்டனா்.அப்போது ஒவ்வொரு பள்ளி வாகனங்களும் தனித்தனியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

    இதில் வாகனத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்பட்டுள்ளதா, ஓட்டுநா்களுக்கு உரிமம் புதுபிக்கப்பட்டுள்ளதா, ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளதா என பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.இதில் தகுதியற்ற வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    • இந்த பகுதியில் செயல்படும் பள்ளிகளில் மொத்தம் 283 வாகனங்கள் உள்ளன. அதில் 147 வாகனங்கள் ஆய்வில் கலந்து கொண்டன.
    • உங்கள் வாகனத்தில் உங்களுடன் பயணிக்கும் குழந்தைகள் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்வார்கள்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று காலை முதல் பள்ளி வாகனங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. மாநில போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பெயரில் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் (பொ) கோகிலா, பரிந்துரையின் பெயரில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டிணம், பேராவூரணி, மதுக்கூர் உள்ளிட்ட பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வரும் ஊர்களில் செயல்படும் பள்ளி வாகனங்கள் தர ஆய்வில் கலந்துகொண்டன.

    சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், ஆய்வாளர் ராஜேஷ், தீயணைப்பு துறை ஆய்வாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். இந்த பகுதியில் செயல்படும் பள்ளிகளில் மொத்தம் 283 வாகனங்கள் உள்ளன. அதில் 147 வாகனங்கள் ஆய்வில் கலந்து கொண்டன. 136 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டி இருந்தது, அவசர உதவி பெட்டி, மறந்து பெட்டி, ஜிபிஎஸ் கேமரா, தீயணைப்பு உபகரணங்கள், வாகனத்தின் தரைத்தளம், வாகனத்தின் உடற்கூறு மற்றும் பொறியியல் நிலைகள் குறித்து ஆய்வில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் பாதுகாப்பின்மை, அவசரவழி கதவினை திறக்க முடியாதது போன்ற காரணங்களால் 2 வாகனங்களுக்கு தரச்சான்றிழ் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்து. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிசெல்லம் வாகனங்கள் என்பதால் வாகன ஆய்வு கடுமையாக பின்ப்பற்றப்படுவதாக வாகன ஓட்டிகள் கூறினர். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கோகிலா மற்றும் கலந்துகொண்ட அதிகாரிகள் ஓட்டுனர்களிடம் கலந்துரையாடிய போது, பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு என சில சமூக கடமைகள் இருக்கிறது.உதராணமாக நீங்கள் சிகப்பு விளக்கு எரியும் போதோ, போக்குவரத்து காவலர் தடுக்கும் போதோ, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி விதிகளை மீறி செயல்படுவது போன்ற செயல்களை நீங்கள் செய்யும் போது, உங்கள் வாகனத்தில். உள்ள குழந்தைகள் எதிர்காலத்தில் நீங்கள் செய்யும் தவறினை, சரி என நினைத்து தவறாக செயல்பட வாய்ப்பிருக்கிறது. போக்குவரத்து விதிகளை பயிற்றுவிக்கும் ஒரு மகத்தான சமூகபணி உங்கள் முன் இருக்கிறது என்பதை நீங்கள் அணைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

    உங்கள் வாகனத்தில் உங்களுடன் பயணிக்கும் குழந்தைகள் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்வார்கள். ஆக தங்கள் அனைவரின் செயல்பாடும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எதிர்கால ஒரு சமூகம் உங்களை பின்பற்றுகிறது என்பதை அறிந்து செயல்படுங்கள் என பேசினார். காலை 8 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த வாகன சோதனை, பத்தரை மணிக்கு மேல் நடைபெற்றது. காத்திருந்த விருந்தினர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    • கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது.
    • பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு பாதுகாப்பாக வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கோவை:

    பள்ளி, கல்வி நிலையங்கள் ஆண்டு விடுமுறை காலம் முடிந்து 2022-2023-ம்கல்விஆண்டு தொடங்கி உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு 2012ன் படி, கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

    அதன்படி கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள 230 பள்ளிகளைச் சேர்ந்த 1,265 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வை மாவட்ட கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார். அப்போது, பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு பாதுகாப்பாக வாகனங்களை எவ்வாறு இயக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் ஆய்வுக்காக வந்திருந்த வாகன டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி வாகனங்களில் அவசரகால வழியுள்ளதா? முதலுதவி பெட்டி உள்ளதா? தீயணைப்பான் 2 உள்ளதா? கண்காணிப்பு காமிராவில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதா? வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளதா? வாகனங்களில் மாணவர்கள் ஏறுவதற்கு வசதியாக தரையிலிருந்து 30 சென்டி மீட்டர் உயரத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், மாவட்ட போக்குவரத்து இணை ஆணையர் செந்தில்நாதன், உதவி கமிஷனர் சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சத்தியகுமார் ,சிவகுருநாதன் பாலமுருகன் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் ஊத்துகோட்டையில் உள்ள 69 தனியார் பள்ளிகளில், வேன், பஸ் என மொத்தம் 259 வாகனங்கள் உள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார்பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வு அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடை பெற்று வருகிறது.

    அதன்படி திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் இன்று ஆய்வு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன்.

    திருவள்ளூர் வட்டாட்சியர் ஸ்ரீனிவாசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி வாகனங்களின் முதலுதவிப் பெட்டி, வேகக்கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துதல், அவசரகாலக் கதவு, ஜன்னல்கள், தீயணைப்புக் கருவிகள், புத்தகப்பை வைக்கும் அடுக்கு உள்பட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

    வாகனங்களுக்கு உரிமம் உள்ளதா, ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா? மற்றும் வாகனங்களில் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு செய்தார். இப்பணி வரும் 31-ந் தேதி வரை நடைபெறும். பள்ளி துவங்கியதும் அனுமதியின்றி இயங்கும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பெரியகுளம் பகுதியில் விதி மீறிச்செல்லும் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களால் விபத்து அபாயம் உள்ளது.
    பெரியகுளம்:

    பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளான எண்டபுளிபுதுப்பட்டி, தாமரைக்குளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் ஆகியபகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பெரியகுளம், தேனி பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இவர்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கிராமப்பகுதியில் அதிவேகமாக பொதுமக்களை பயமுறுத்தும் விதமாக சுற்றி வருகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் ஷேர் ஆட்டோக்களில் அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு விதிமீறிச் செல்கின்றனர். இந்த ஆட்டோக்களுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா? என்பது கூட தெரியவில்லை. எனவே ஆபத்தை உணராமல் பொதுமக்கள் அவசர தேவைக்காக இவற்றை பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து அதிகாரிகள் இந்த வானங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல சிறப்பு அனுமதி பெறாத ஆட்டோ, வேன்களுக்கு வட்டார போக்குவரத்து பறக்கும் படை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
    திருச்சி:

    திருச்சி மண்டல போக்குவரத்து இணை ஆணையர் சிவகுமார் உத்தரவின்பேரில் பறக்கும் படை வட்டார போக்குவரத்து அதிகாரி கணேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நெடுஞ்செழிய பாண்டியன், முகமது மீரா, குணசேகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருச்சி மேலப்புதூர் சுரங்கப்பாதை அருகில் வாகன ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ, வேன்களை அதிரடியாக நிறுத்தி சோதனை செய்யப்பட்டன.

    அப்போது பல ஆட்டோ மற்றும் வேன்கள் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்வதற்கான சிறப்பு அனுமதி பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சில வாகனங்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி சென்றதும், முறையான தகுதிச்சான்று பெறாமல் இருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக பிடிபட்ட ஆட்டோக்கள், வேன்களுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களை இயக்குபவர்கள் அதற்குரிய சிறப்பு அனுமதி சீட்டினை பெற்றிருக்க வேண்டும். அப்படி பெறாத வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று அனுமதி சீட்டினை பெற்றுக்கொள்ளும்படி பறக்கும் படை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
    ×