search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்களுக்கு நிவாரண உதவி பெற்றுத்தருவதாக மோசடி - பெண் கைது
    X

    மீனவர்களுக்கு நிவாரண உதவி பெற்றுத்தருவதாக மோசடி - பெண் கைது

    மீனவர்களுக்கு நிவாரண உதவி பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதியதில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இந்த கச்சா எண்ணெய் மாமல்லபுரம் கடற்கரை வரை படர்ந்து இருந்தது.

    இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுதொடர்பாக நடந்த வழக்கில் மீனவர்களுக்கு நிவாரண உதவியாக ரூ.141 கோடி வழங்க கப்பல் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

    இந்த நிலையில் ராயபுரத்தை சேர்ந்த அமுதா என்பவர் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், பெண்களிடம் நிவாரண உதவி பெற்றுத் தருவதாக கூறி பணம் வசூலித்தார். இதனை நம்பி அவரிடம் ராயபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா பெண்கள் மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் பணம் கொடுத்து இருந்தனர்.

    ஆனால் அமுதா, கூறியபடி நிவாரண உதவி பெற்றுக்கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாந்த ராயபுரத்தை சேர்ந்த திலகவதி உள்பட 30 பேர் ராயபுரம் போலீசில் புகார் செய்தனர்.

    விசாரணையில் அமுதா, சுமார் 300-க்கும் மேற்பட்டோரிடம் நிவாரண உதவி பெற்றுத் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அமுதாவை போலீசார் கைது செய்தனர். #tamilnews

    Next Story
    ×