search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகர பஸ்சில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
    X

    மாநகர பஸ்சில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

    சென்னை பாரிமுனை பகுதியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    பாரிமுனை பகுதியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு கும்பல் செல்போன்களை திருடியது.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் பாரிமுனையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை சோதனை செய்த போது நிறைய செல்போன்கள் இருந்தன.

    விசாரணையில் அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பதும், கூட்டமாக செல்லும் மாநகர பஸ்சில் சென்று செல்போன்களை திருடியதும் தெரிய வந்தது.

    மேலும் அவர் திருடிய செல்போன்களை பர்மா பஜாரில் உள்ள ஒரு கடையில் விற்றதும் தெரிந்தது. இதையடுத்து அவரிடம் செல்போன்களை வாங்கி மருது பாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.

    அவரது கடையில் இருந்து 63 செல்போன்கள், லேப்-டாப்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    தண்டையார்பேட்டை கப்பல்போலு தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தபோது சிறுவன் புகுந்து ஒரு பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடி சென்றான். மேலும் கோமதி என்பவர் வீட்டில் செல்போனும், மாலகொண்டராவ் வீட்டில் ரூ.7 ஆயிரம், செல்போன் ஆகியவற்றையும் திருடினான்.

    அப்போது சத்தம் கேட்டு எழுந்த மாலகொண்டராவ் சிறுவனை பிடிக்க முயன்றார். ஆனால் சிறுவன் தப்பி ஓடி விட்டான்.

    இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×