search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்டையார்பேட்டையில் சினிமா தியேட்டரில் தீ விபத்து
    X

    தண்டையார்பேட்டையில் சினிமா தியேட்டரில் தீ விபத்து

    தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள சினிமா தியேட்டரின் மேற்கூரையில் தீ விபத்து ஏற்பட்டது.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் எம்.எம். தியேட்டர் உள்ளது.

    நேற்று மதியம் சினிமா காட்சி நடைபெற்ற நேரத்தில் தியேட்டரின் மேற்கூரை திடீரென தீப்பிடித்தது.

    காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தியேட்டர் ஊழியர்கள் அங்கிருந்தவர்களை வெளியேற்றினர். தியேட்டரில் தீ பிடித்திருப்பது பற்றி அறிந்ததும் சினிமா பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே வந்தனர்.

    இது குறித்து தண்டையார்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

    அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தியேட்டரின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்தது.

    தியேட்டர் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் மெட்ரோ ரெயிலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனால் தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக அங்கு வர தாமதம் ஏற்பட்டது.

    தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது பற்றி தண்டையார்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews

    Next Story
    ×