search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை என்.ஆர்.காங். எம்.எல்.ஏ. மீது 2 போலீஸ் நிலையங்களில் வழக்கு
    X

    புதுவை என்.ஆர்.காங். எம்.எல்.ஏ. மீது 2 போலீஸ் நிலையங்களில் வழக்கு

    புதுச்சேரியில் ரே‌ஷன் கடைகளை இழுத்து மூடிய என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து மீது 2 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு சிவப்பு நிற ரே‌ஷன் கார்டும், வசதி படைத்தவர்களுக்கு மஞ்சள் நிற ரே‌ஷன் கார்டும் வழங்கப்பட்டுள்ளது.

    புதுவை அரசின் குடிமை பொருள் வழங்கல்துறை சார்பில் அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி, தீபாவளி சர்க்கரை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இலவசங்களை தகதி படைத்த ஏழைகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

    மேலும் வசதி படைத்தவர்கள் சிவப்பு நிற ரே‌ஷன் கார்டுகள் வைத்திருப்பதாக புகார்கள் வந்துள்ளதால் அது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி முறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனையடுத்து சிவப்பு ரே‌ஷன் கார்டு வைத்திருக்கும் வசதி படைத்தவர்களை கண்டறியும் பணி நடந்தது.

    அவர்களது கார்டுகளை நீக்கம் செய்து மஞ்சள் கார்டுகளாக மாற்றுவதற்கான அறிவிப்பு அனைத்து ரே‌ஷன் கடைகளின் அறிவிப்பு பலகையிலும் ஒட்டப்பட்டது. இதில் உண்மையான ஏழைகள் பாதிக்கப்படுவதாக எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டினர்.

    அதோடு அரசு பாரபட்சமாக எதிர்க்கட்சி தொகுதியில் சிவப்பு ரே‌ஷன் கார்டுகளை அதிக அளவில் நீக்கி இருப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்தனர். தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவப்பு ரே‌ஷன் கார்டு நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது தொகுதியில் உள்ள 14 ரே‌ஷன் கடைகளை இழுத்து பூட்டு போட்டு பூட்டினார்.

    மேலும் என்.ஆர்.காங் கிரஸ எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக சேர்ந்து குடிமைப் பொருள் வழங்கல்துறை இயக்குனரிடம் சிவப்பு ரே‌ஷன் கார்டுகளை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மனுவும் அளித்தனர்.

    இந்த நிலையில் ரே‌ஷன் கடைகளை இழுத்து மூடிய என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து மீது குடிமை பொருள் வழங்கல்துறை நிர்வாக அதிகாரி ஜோதிராஜ் 2 போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதுவை லாஸ்பேட்டை, கோரிமேடு போலீசார் அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ. மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்திய தண்டனை சட்டம் 341 (அரசு அலு வலகத்தில் அத்து மீறி நுழைந்து பூட்டுதல்), 186 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 426 (ஆவணங்களை சேதப்படுத்துதல்) என 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×