search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் 76-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து
    X

    சென்னை விமான நிலையத்தில் 76-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து

    சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இன்று 76-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ChennaiAirport
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இவை பயன்பாட்டுக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

    இதற்கிடையே, விமான நிலையத்தில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் அடிக்கடி உடைந்து விழுவதும், சில சமயங்களில் மேற்கூரை இடிந்து விழுவதும், கண்ணாடி கதவுகள் உடைந்து விழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுபோன்ற விபத்துகளில் சிக்கி இதுவரை 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இன்று மாலை 76-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் கண்ணாடி மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென  உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்தது 76-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. #ChennaiAirport #tamilnews
    Next Story
    ×