search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல் கட்சியில் சேர தயாராகும் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள்
    X

    கமல் கட்சியில் சேர தயாராகும் ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள்

    ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கமலுடன் கைகோர்க்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் வலுவாக கால்பதிக்க ரஜினியும், கமலும் போட்டி போட்டுக் கொண்டு காய் நகர்த்தி வருகிறார்கள்.

    புதிய கட்சியை தொடங்குவதற்கான முயற்சிகளை இருவரும் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். வருகிற 21-ந்தேதி ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கும் கமல் அன்று இரவு மதுரையில் நடைபெறும் பிரமாண்ட மாநாட்டில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்.

    சினிமாவை தொடர்ந்து அரசியல் களத்திலும் ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கி உள்ள கமல் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் வைத்து ரசிகர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். காவிரி பிரச்சினையில் ரஜினியை முந்திக் கொண்டு முதல் ஆளாக குரல் கொடுத்தார். இப்படி தனது அரசியல் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வரும் கமலை சினிமா பிரபலங்களும், தொழில் அதிபர்கள் பலரும் சந்தித்து ஆலோசித்து வருகிறார்கள்.

    தொழில் அதிபர் ஒருவர் கமல் புதுக்கட்சியை தொடங்கியவுடன் அதில் சேர்ந்து பணியாற்ற உள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரும் கமல் கட்சியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது பணியில் இருக்கும் நீதிபதி ஒருவரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கமல் கட்சியில் இணைகிறார். அதே போல பதவியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும் தனது அரசுப் பணியை விட்டுவிட்டு கமலுடன் கைகோர்க்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரும் கமல் கட்சியில் சேருகிறார்.

    இது தொடர்பாக கமல் நற்பணி மன்றத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் கமலுடன் கை கோர்க்க தயாராகி வருகிறார்கள். அறிவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 21 பேர் கொண்ட குழுவை கமல் அமைத்துள்ளார். தமிழகத்தை முன்னேற்ற என்னென்ன செய்யலாம் என்பது பற்றி இக்குழுவினர் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளை பட்டியல் எடுத்து வைத்துள்ள கமல் அவைகளை தீர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றியே சிந்தித்து வருகிறார். இது தொடர்பாக பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டு வருகிறார். ‘நாளை நமதே’ அரசியல் பயணத்தை தொடங்கியவுடன் தேர்தல் அறிக்கையை தயார் செய்யவும் கமல் திட்டமிட்டுள்ளார். 200 நாட்களில் திட்டமிட்டு கமலின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×