search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஏஎஸ்"

    • கனமழை மற்றும் வெள்ளத்தால் தென் மாவட்டங்களில் கடும் பாதிப்பு.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம்.

    வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல்.

    • கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெகநாதன், வணிகவரித்துறை ஆணையராக மாற்றப்பட்டார்.
    • தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் சோபனா எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

    சென்னை:

    தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜெகநாதன், வணிகவரித்துறை ஆணையராக மாற்றப்பட்டார்.

    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையின் செயலாளராக இடம் மாற்றப்பட்டார்.

    விழிப்பு பணி ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் கோபால் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார்.

    தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் சோபனா எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

    சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அதிகாரி கவிதா ராமு தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுலாத்துறை முதன்மை செயலாளராக காகர்லா உஷா நியமனம்.
    • டிட்கோ மேலாண் இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மை செயலாளராக தீரஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பள்ளிக் கல்வித்துறையின் புதிய செயலாளராக குமர குருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சுற்றுலாத்துறை முதன்மை செயலாளராக காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    டிட்கோ மேலாண் இயக்குநராக சந்தீப் நந்தூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • தமிழகம் முழுக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்.
    • 16 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு முழுக்க 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 16 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, சிவில் சப்ளை டி.ஜி.பி. வன்னிய பெருமாள், ஊர்க்காவல்படை டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக அபிஷேக் தீக்ஷித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தென்காசி எஸ்.பி. ஆக சுரேஷ் குமார், கரூர் எஸ்.பி. ஆக பிரபாகர், நீலகிரி எஸ்.பி. ஆக சுந்தர வடிவேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார்.

    திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இதே போன்று கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடியால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த தீபா சத்யன், டி.ஜி.பி. அலுவலக எஸ்.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.

    • தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்.
    • வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம்.

    தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில், வருவாய்த்துறை செயலாளராக ராஜா ராமன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சிஜி தாமஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை ஆணையராக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

    குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையராக பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • திட்டங்களை செயல்படுத்த 3 மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

    அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நந்தகோபால், திருப்பூருக்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார்.
    • யுபிஎஸ்சி தேர்வில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற பணியிடங்களுக்கும், குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் உள்ள பிற பணியிடங்களையும் நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வை நடத்துகிறது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த தேர்வில் மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர். அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடம் பிடித்துள்ளார். கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாமிடமும், ஸ்மிருதி மிஷ்ரா நான்காம் இடமும் பிடித்தனர்.

    தேர்ச்சி பெற்றவர்களில் 345 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்கள், 99 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள், 263 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 154 பேர் எஸ்சி பிரிவையும், 72 பேர் எஸ்டி பிரிவையும் சேர்ந்தவர்கள். 

    • தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.
    • உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    அரசு துறைகளில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருப்போருக்கு தனியார் அமைப்புகள் மற்றும் கிளப்புகள் பாராட்டி விருது வழங்கி கவுரவிப்பது பல மாநிலங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கேரளாவில் ஒரு கோவில் விழாவில் திறம்பட செயல்பட்டமைக்காக ஒரு தனியார் அமைப்பு கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாராட்டும், சிறப்பு விருதும் வழங்கியது.

    இதற்கு கேரள காவல்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலானது.

    இதையடுத்து கேரளாவில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இனி தனியார் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் வழங்கும் விருதுகளை வாங்க கூடாது என கேரள தலைமை செயலாளர் வி.பி.ஜாய் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் மாநில அரசின் முன் அனுமதி பெறாமல் எந்த ஒரு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விருது வாங்க கூடாது. இந்த உத்தரவை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை செயலாளர் வி.பி.ஜாய் எச்சரித்துள்ளார். 

    ×