என் மலர்
இந்தியா

ரூ.2000 செலவில் திருமணம் செய்த ஐ.ஏ.எஸ். தம்பதி
- பயிற்சியின் போது இருவரும் சந்தித்து நட்பாக பழகி வந்தனர்.
- 2023-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் மவுனிகா. இவர் மருத்துவ படிப்பு முடித்து பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் யுவராஜ் மர்மத். சிவில் இன்ஜினியரிங் முடித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சில ஆண்டுகள் வேலை செய்தார். பின்னர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
கடந்த 2022-ம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்ற இருவரும் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் ஐ.ஏ.எஸ். பயிற்சியில் சேர்ந்தனர்.
பயிற்சியின் போது இருவரும் சந்தித்து நட்பாக பழகி வந்தனர். இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறியது. 2023-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பயிற்சியின் போது திருமணம் செய்து கொண்டதை பெற்றோர்களிடம் தெரிவித்தால் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கருதி திருமணம் செய்ததை மறைத்தனர்.
ஐ.ஏ.எஸ் பயிற்சி முடிந்ததால் இருவரும் நேற்று பெற்றோர்கள், நண்பர்கள், வகுப்பு தோழர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு மலர் மாலைகள் மற்றும் இனிப்புகள் வாங்க ரூ. 2 ஆயிரம் மட்டுமே செலவு செய்தனர்.






