search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்
    X

    மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

    தமிழக அரசு மின்வாரிய ஊழியர்களுடன் உடனடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் அறிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக மின்வாரியத்தில் பணிபுரிகின்ற ஊழியர்களுடன் உடனடி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் மின்வாரியத்தில் பணிபுரிகின்ற ஊழியர்கள் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை போன்றவை தொடர்பாக கடந்த சில வருடங்களாக அரசுக்கு கோரிக்கைகள் வைத்தும் இன்னும் அவைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக மின்வாரியத்தில் பணிபுரிகின்ற ஊழியர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக அரசுக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையே பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமூகத்தீர்வு எட்டப்படவில்லை.

    இதுவரையில் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காமல் காலம் தாழ்த்துவதையே ஏற்றுக் கொள்ள முடியாது. இருப்பினும் மின்வாரிய ஊழியர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுக் கணக்கீட்டுக் காரணிகளான 2.57 விழுக்காட்டை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.



    அதே போல அவர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையையும் காலம் தாழ்த்தாமல் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    எனவே தமிழக அரசு மின்வாரிய ஊழியர்களுடன் உடனடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தர வாதம் அளித்திடவும், வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், மக்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய மின்சார வசதி தங்கு தடையின்று தொடர்ந்து கிடைத்திடவும், மின்வாரிய ஊழியர்களின் நலன் காத்திடவும் வழி வகுத்து தர வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    Next Story
    ×