search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழி, ராசா கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றனர்
    X

    2ஜி வழக்கில் விடுதலையான கனிமொழி, ராசா கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றனர்

    2ஜி வழக்கில் இருந்து விடுதலையானதும் சென்னை திரும்பிய கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோர், கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    சென்னை:

    2ஜி வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி ராசா ஆகியோரை விடுதலை செய்து சி.பி.ஐ. நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார். இது தி.மு.க.வினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்புக்கு பின் கனிமொழி, ராசா ஆகியோர் இன்று சென்னை திரும்பினார்கள். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை வரவேற்பதற்காக ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரை முருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் மற்றும் நிர்வாகிகளும் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். மு.க.ஸ்டாலின் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்தும் கட்டித்தழுவியும் வரவேற்றார்.

    வரவேற்பு முடிந்ததும் கனிமொழி, ராசா இருவரும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அங்கு வந்திருந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனையும் இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    கனிமொழி, ராசா வருவதையொட்டி கோபாலபுரம் வீட்டு வாசல் முன்பு ஏராளமான தொண்டர்கள் திரண்டு மேள-தாளத்துடன் வரவேற்பு அளித்தனர்.
    Next Story
    ×