search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூ.1.49 கோடி மதிப்புள்ள சிலை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை
    X

    15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூ.1.49 கோடி மதிப்புள்ள சிலை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை

    15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 1.49 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டுள்ளனர்.
    சென்னை:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 2002–ம் ஆண்டில் பழங்கால சிலைகள் கொள்ளைபோனது. மிகவும் பழமையான இந்தச் சிலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது.

    சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்ட சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம், தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியபோது, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 6 சிலைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிலை கடத்தலில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு, சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ரூ.1.49 கோடி மதிப்புள்ள நரசிம்மி சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டிருப்பதாகவும், இந்த சிலை 1040 ஆண்டுகள் பழமையானது என்றும் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. பிரதீப் பிலிப் தெரிவித்துள்ளார்.

    மீட்கப்பட்ட இந்த நரசிம்மி சிலை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலைச் சேர்ந்தது என்றும், மேலும் திருடப்பட்ட 4 சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
    Next Story
    ×