search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இயற்கை நூலிழையில் உலா வரும் புதிய ஆடைகள்
    X

    இயற்கை நூலிழையில் உலா வரும் புதிய ஆடைகள்

    மென்மை தன்மை கொண்ட இயற்கை இழையில் ஆடைகள் மேம்படுத்தும் வகையில் குறிப்பாக பெண்களின் மென்மையான சருமத்திற்கு உகந்த வகையில் இந்த இயற்கை இழை ஆடைகள் உதவுகின்றன.
    நாம் அணிகின்ற எந்தவித துணியிலான ஆடைகளும் உடலில் படும்போது ஏதேனும் ஒர் உரசலை, உறுத்தலை தரவே செய்யும். ஏனெனில் அந்த துணி நெய்யும் நூல் இழைகளில் உள்ள கட்டமைப்பே காரணமாக அமைகின்றது. குறிப்பாக செயற்கை இழை ஆடைகள் என்பவை உடலில் படும்போது அதிக தொந்தரவுகளையும், கோடை காலத்தில் அதிக எரிச்சலையும் தரும். அதனை போக்கும் விதமாக புதிய வழவழப்பும், மென்மை தன்மையும் கொண்ட இயற்கை இழையில் ஆடைகள் மேம்படுத்தும் வகையில் குறிப்பாக பெண்களின் மென்மையான சருமத்திற்கு உகந்த வகையில் இந்த இயற்கை இழை ஆடைகள் உதவுகின்றன.

    நூறு சதவீதம் இயற்கை இழை


    புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த துணி என்பது முற்றிலும் இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ளுயிட் பேஷன் என்றவாறு திரவ நிலையின் வளைவுகள், மென்மை தன்மை கொண்ட துணியமைப்பாக உள்ளது. எங்கும் எப்போதும் அணிய கச்சிதமான, மென்மையான சுற்று சூழலுக்கு பாதிப்பு உண்டாகாத, நூறு சதவீதம் இயற்கை முறையில் இந்த துணியமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதனை அணியும் போது அதிக சுதந்திரத்தன்மை ஏற்படுவதுடன் நல்ல காற்றோட்டமான உணர்வையும் தருகிறது. ஆடை அணியும் போது மற்ற துணிகளை போல் கனமாக தெரியாமல் எடைகுறைவான துணியமைப்பாகவே தோற்றமளிக்கும். எனவே இந்த வகையில் நெய்யப்படும் ஆடை அணியும் போது ஆடையை சுமக்க வேண்டியுள்ளது என்ற நினைப்பே ஏற்படாது. கோடைகாலம், குளிர்காலம் என அனைத்து காலங்களிலும் அணிய ஏற்ற வகையில் உள்ளது.

    மனிதனால் உருவான இயற்கை நூலிழை

    இந்த புதிய துணிவகை என்பது முற்றிலும் மரக்கூழ் கொண்டு இயற்கையான நூலிழையாக செய்யப்பட்டு தயார் செய்யப்படுகிறது. அதாவது இயற்கையாகவே மறுசுழற்சி வளத்தை மேம்படுத்தும் வகையிலான மரக்கூழ் மூலம் இதன் உருவாக்கம் உள்ளது. இதற்கென பிரத்யேகமாக வளர்க்கப்படும் மரங்கள் என்பவை எவ்வளவு மரம் வெட்டப்படுகிறதோ அதனை விட அதிக மரங்கள் உடனேயே நடப்படுகின்றன.



    இந்த வகை மரக்கூழ் நூலிழை தயாரிப்பின் முறை பருத்தி மூலம் நூலிழை தயாரிப்பைவிட புவி பாதுகாப்பு நிகழ்வு அதிகமாக பேனப்படுகிறது. ஆம் பருத்தியை விட ஆறு (அ) ஏழு மடங்கு குறைந்த நிலப்பகுதியில் இம்மரம் வளர்க்கப்படுகிறது. அத்துடன் பருத்தி வளர பயன்படும் நீரின் அளவை விட குறைவான நீரே இம்மரவளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே சுற்றுச்சூழல் வளங்களை மேமம்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பு முதல் நூலிலை தயாரிப்பு வரை அனைத்தும் புவி பாதுகாப்பு அம்சம் நிறைந்தவையாகவே உள்ளது.

    புதிய ஆடைகள் தயாரிப்பில் இயற்கை நூலிழை

    பலதரப்பட்ட ஆடைகள் தயாரிப்புக்கு என இந்த புதிய பிராண்ட் இயற்கை நூலிழை பயன்படுத்தப்படுகிறது. அதிகபட்ச அளவில் புது ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இப்புதிய நூலிழை கொண்டு ஆண், பெண் என இருபாலர் ஆடைகள் தயாரித்து வழங்குகின்றனர். இயற்கையான செல்லுலாஸ் நூலிழை என்பது அதிக மென்மை தன்மையுடன் ஒர் புதிய பரவச அனுபவத்தை தருகிறது என்பதால் பலரும் இதன் மீதான ஆர்வத்தை அதிகரித்து வருகின்றனர்.

    இந்த நூலிழை ஆடைகள் என்பதன் மேற்புற தோற்ற அமைப்பு அதிக பளபளப்பும், மென்மை தன்மையும் கொண்டதாக உள்ளது. எனவே இதில் நெய்யப்படும் ஆடைகள் அதிக பொலிவு மற்றும் அதிகபட்ச அழகு தன்மையை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன. நமது சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்ட இயற்கை நூலிழை ஆடைகள் பயன்படுத்திய பிறகும் பூமிக்கு பாரமாக அமையாத வகையில் உள்ளது.

    புதிய ப்ளுயிட் பேஷன் என்ற வகையில் அறிமுகமான இந்த வகை ஆடைகள் பெரும்பாலான பெண்களின் விருப்பமான ஆடைகளாக உள்ளது. பெண்களின் தோற்ற பொலிவை, கச்சிதமான உருவ அமைப்பை வெளிப்படுத்தும் ஆடை என்பதுடன் அவர்களின் மென்மை தன்மையை வெளிப்படுத்தும் ஆடையாகவும், இயற்கை நூலிழை ஆடைகள் உலா வருகின்றன.
    Next Story
    ×