search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான மதிய உணவு முட்டைகோஸ் சாதம்
    X

    சத்தான மதிய உணவு முட்டைகோஸ் சாதம்

    முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். இன்று முட்டைகோஸ் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    துருவிய முட்டைகோஸ் - ஒரு கப்
    உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 4
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
    இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்
    கடுகு, உளுந்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - சிறிதளவு.



    செய்முறை :

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பட்டை, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் மிளகு - சீரகத்தூள், வேர்க்கடலை போட்டுக் கிளறவும்.

    அடுத்து அதில் ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும்.

    அடுத்து துருவிய முட்டைகோஸ், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேகவிட்டு இறக்கவும்.

    முட்டைகோஸ் நன்றாக வெந்தும் இறக்கி வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    சுவையான சத்தான முட்டைகோஸ் சாதம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×