search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு சக்தி தரும் காளான் பார்லி சூப்
    X

    உடலுக்கு சக்தி தரும் காளான் பார்லி சூப்

    உடலுக்கு வலுசேர்க்க தினமும் ஏதாவது ஒரு சூப்பை குடிப்பது நல்லது. இன்று காளான், பார்லி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காளான் - 100 கிராம்
    பார்லி - 50 கிராம்
    பட்டர் / எண்ணெய் - தேவையான அளவு
    பூண்டு - 4 பல்
    தக்காளி - ஒன்று
    ரசப்பொடி - அரை தேக்கரண்டி
    மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
    உப்பு - சுவைக்கு
    சத்து மாவு - 2 தேக்கரண்டி
    ஃப்ரஷ் ஒரிகனோ - சிறிது
    கொத்தமல்லித்தழை - சிறிது



    செய்முறை :

    வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    தக்காளி, காளானை சிறுத்துண்டுகளாக நறுக்கவும்.

    பார்லியை வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, ஒரிகனோ சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, காளான் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் காளான் கலவையில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, வேக வைத்த பார்லி சேர்த்து கொதிக்க விடவும்.

    கொதித்து வரும் பொழுது கால் டம்ளர் நீரில் சத்து மாவை கரைத்து ஊற்றி ரசப்பொடி தூசி இறக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித் தழை சேர்த்து சூடாக பரிமாறவும்..

    சத்து நிறைந்த காளான் பார்லி சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×