search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மனை தரிசிக்க கோடி கண்கள் போதாது
    X

    அம்மனை தரிசிக்க கோடி கண்கள் போதாது

    சக்தி தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க கோடி கண்கள் இருந்தாலும் போதாது என்பதே பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்கோவில் நீண்ட நெடிய வரலாற்றுக்கு சொந்தமானது. காடாறு மாதம் நாடாறு மாதம் ஆண்ட விக்கிரமாதித்த மகாராஜா காலத்தில் அவர் பூஜித்து வழிபட்டது என்ற மிக பழமையான திருத்தலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு.

    பொதுவாக சக்தியே வடிவான அம்மன் கோவில்களில் அம்மன் சிலைகள் ஆக்ரோஷமாகவோ, உக்கிரமாகவோ இருக்கும். ஆனால் சமயபுரம் மாரியம்மன் சாந்தமான வடிவில் வீற்றிருந்து அருள்பாலிப்பது சிறப்புக்குரியதாகும். வேறு எந்த தலத்திலும் காணப்பெறாத படி இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளி உள்ளார். இத்திருக்கோலத்தில் அம்மனை தரிசிக்க கோடி கண்கள் இருந்தாலும் போதாது என்பதே பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சிறப்புக்குரியதாகும். பச்சைப்பட்டினியின்போது அம்மனுக்கு நைவேத்தியம் படைக்கப்படாது. இளநீர் உள்பட நீராகாரமே படைக்கப்பட்டு வருகிறது. மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்மன் பச்சை பட்டினி விரதம் இருந்து பக்தர்களின் துயரை துடைத்து உள்ளார். இத்தகைய சிறப்புமிக்க சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டத்தில் பங்கேற்று அம்மனின் அருள் பெறுவோமாக.
    Next Story
    ×