search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏகாதசி விரதம் - புராணக் கதை
    X

    ஏகாதசி விரதம் - புராணக் கதை

    மகாவிஷ்ணுவிற்கு உகந்த ஏகாதசி விரதத்திற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. அந்த புராணக்கதையை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பவுர்ணமி திதிக்கு பிறகு 11-ம் நாளில் வரும் திதி ஏகாதசி ஆகும். ஒரு முறை முரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அந்த அசுரனை அழிக்க மகாவிஷ்ணு போரிட்டார். இந்தப் போர் 1000 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றது.

    ஒரு கட்டத்தில் இருவருமே களைப்படைந்தனர். மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமம் என்ற இடத்தில் ஒரு குகையில் ஓய்வெடுத்தார். ஓய்வெடுக்கும் வேளையில் மகாவிஷ்ணுவை கொல்ல வந்தான் முரன்.

    அப்போது விஷ்ணுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்ட சக்தி, பெண்ணாக உருவெடுத்து, முரனை அழித்தது. கண்விழித்த மகாவிஷ்ணு அந்த சக்திக்கு ‘ஏகாதசி’ என்று பெயரிட்டதாக புராணக் கதை ஒன்று சொல்கிறது. மேலும் ‘ஏகாதசியில் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை நான் அளிப்பேன்’ என்றும் மகாவிஷ்ணு அருள்புரிந்தார்.

    மன்னர் அம்பரிஷ், தீவிர விஷ்ணு பக்தர். அவர் நெடுங்காலமாக ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து வந்தார். ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்தால் அம்பரிஷ் மன்னனின் உயிருக்கு ஆபத்து வந்தது. ஆனால் அவன் செய்த ஏகாதசி விரத பலனால், விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் துர்வாசரை கொல்ல துரத்தியது. பயந்து போன துர்வாச முனிவர், அம்பரிஷ் மன்னனை சரணடைந்ததுடன், அவனுக்கு அளித்த சாபத்தையும் நீக்கினார். ஏகாதசி விரதத்தின் பலன் அப்படிப்பட்டது.
    Next Story
    ×