search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரமாண்ட நாயகன்
    X

    பிரமாண்ட நாயகன்

    ராமா என்ற வெங்கடேச பெருமாள் பக்தனின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட ‘பிரமாண்ட நாயகன்’ படத்தின் முன்னோட்டம்.
    ராமா என்ற வெங்கடேச பெருமாள் பக்தனின் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட படம் ‘பிரமாண்ட நாயகன்’. இதை ஜோதிகா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

    இதில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய்குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    வசனம், பாடல்கள் - டி.எஸ் பாலகன், கதை - ஜே.கே.பாரவி, ஒளிப்பதிவு - கோபால் ரெட்டி. இந்த படத்தை ‘பாகுபலி’ புகழ் எஸ்.எஸ். ராஜமவுலியின் குரு கே.ராகவேந்திர ராவ் இயக்கி இருக்கிறார். படம் பற்றி கூறிய படக்குழுவினர்...



    “பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அனுஷ்கா நடித்துள்ளார். மகாபாரத கிருஷ்ணராக நடித்த சவுரப் ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று நடித்துள்ளார். ‘பாகுபலி’க்கு இசையமைத்த கீரவாணி இந்த படத்துக்காக 12 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படம். விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது” என்றனர்.

    “பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் இந்த படத்தில் அமைந்துள்ளது.

    பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் உலகமெங்கும் இந்த படத்தை திரையிட தயாரிப்பாளர்கள் எஸ்.துரைமுருகன், டி.நாகராஜன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்” என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×