search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஒரே நாளில் இரண்டு பூஜை போட்ட சிவகார்த்திகேயன்
    X

    ஒரே நாளில் இரண்டு பூஜை போட்ட சிவகார்த்திகேயன்

    ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தின் பூஜையும், அதே நேரத்தில் அவர் தயாரித்து வரும் படத்திற்கும் பூஜை போட்டிருக்கிறார். #Sivakarthikeyan
    பொன்ராம் இயக்கத்தில் `சீமராஜா' படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக `இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், அந்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியருக்கிறது. 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு, இஷா கோபிகர் பானுப்ரியா மற்றும் தொலைக்காட்சி பிரபலம் கோதண்டம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

    அதுபோல் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கனா’ படத்தின் டப்பிங் பணிக்கான பூஜையும் இன்று போடப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கனா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்து வருகிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.



    ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களையும் அவற்றை ஒரு பெண் எப்படி வென்று காட்டுகிறாள்? என்பதையும் மையமாக வைத்து உருவாகிறது கனா படம். கிரிக்கெட் தொடர்பான படம் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வாட்மோரிடம் பயிற்சியும் ஆலோசனையும் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா. #Kanaa #SK13 #Sivakarthikeyan
    Next Story
    ×