search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எங்களுக்கும் கோபம் வரும் - உதயநிதி ஸ்டாலின்
    X

    எங்களுக்கும் கோபம் வரும் - உதயநிதி ஸ்டாலின்

    படத்தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், நடிகர் என பன்முகம் கொண்ட உதயநிதி ஸ்டாலின், எங்களுக்கும் கோபம் வரும் என்று பட விழாவில் கூறியிருக்கிறார். #UdhayanidhiStalin #OrukuppaiKathai
    பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பை கதை'. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார். இயக்குனர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி.

    மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.

    இந்த விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, “குப்பை அள்ளக்கூடிய மனிதர்களை கதையின் நாயகர்களாக்கியதற்கும், அந்த கதாநாயகனாக தினேஷ் மாஸ்டரை நடிக்க வைத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். குப்பையில் தான் என்னென்ன கிடக்கின்றன..? குப்பை ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும். தினேஷ் மாஸ்டர் என் படங்களுக்கான நாயகன் போல தெரிகிறார். அவர் மூலமாகத்தான் ‘தர்மதுரை ‘மக்க கலங்குதப்பா’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது” என்றார்.

    இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, “ரெட் ஜெயன்ட் மூவிஸ், குறிப்பாக செண்பகமூர்த்தி சார் ஒரு படத்தை வாங்குகிறார் என்றால் நிச்சயம் அந்தப்படம் வெற்றி அடையும். பட தயாரிப்பில் கூட சில சமயம் அசந்துவிடுவார். ஆனால் படங்களை வாங்கி வெளியிடுவதில் கெட்டிக்காரர்” என்றார். 

    உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாக தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருடம் வெற்றிகரமாக ஓடிவிட்டது. இதில் நல்ல படங்கள், ஆவரேஜ் படங்கள், சில மட்டமான படங்களை கூட கொடுத்துள்ளோம். ஆனால் இந்தப்படம் மைனா போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம்.



    நான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் எப்படி சந்தானம் தொடர்ந்து எனது படங்களில் இடம்பிடித்தாரோ அதேபோல தினேஷ் மாஸ்டரும் என் படங்களில் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். மாஸ்டராக இருக்கும்போது சரியான நேரத்திற்கு வந்தவர், இப்போ ஹீரோ ஆனதும் லேட்டா வர ஆரம்பிச்சுட்டார் போல. என்ன மாதிரி சில பேர்க்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்து என்னடா இவனுங்க இப்படி ஆடுறாங்கன்னு, அந்த கோபத்துலே இதுல நல்லதா நாலு டான்ஸ் ஆடியிருப்பார்னு நினைக்கிறன்.

    தப்பான படங்கள் கொடுத்தால் திட்டுகிறீர்கள். கழுவி ஊற்றுகிறீர்கள். அதேசமயம் நல்ல படங்களை கொடுக்கும்போது நீங்கள் எங்களுக்கான வரவேற்பை கொடுங்கள். இல்லாவிட்டால் எங்களுக்கும் கோபம் வரும்” என்றார்.
    Next Story
    ×