search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oru Kuppai Kathai"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒரு குப்பைக் கதை தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை என்று வில்லனாக நடித்த கிரண் ஆர்யா கூறியிருக்கிறார். #KiranArya #OruKuppaiKathai
    நடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றிபெற்ற ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர் கிரண்ஆர்யா.

    சீரியலில் நடித்து தமிழ் மக்கள் அனைவரது அன்பையும் பெற்றுள்ள கிரண் ஆர்யா தன் சினிமா அனுபவத்தை பகிர்ந்த போது...

    நான் சிறு வயதாக இருக்கும் போதே எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஏன் என்றால் என் சித்தப்பா ஒரு இயக்குனர். அப்போதிலிருந்தே சினிமா மீது எனக்கு காதல்.

    கல்லூரி முடித்து சொந்தமாக ஒரு தொழில் துவங்கி வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது என் நண்பர் குறும்படத்தில் என்னை நடிக்க வைத்தார். அப்போதிலிருந்து என் சினிமா வாழ்க்கை ஆரம்பமாகி விட்டது.

    பிறகு தகடு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன். பிறகு பாலுமகேந்திரா ஐயா அவரது கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்று வந்தேன். அப்போது பார்த்த இயக்குனர் காளி ரங்கசாமி என்னை ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லன் காதபாத்திரத்தில் நடிக்க வைத்தார். படத்தில் என்னை நம்பி பெரிய கதாபாத்திரம் கொடுத்தார் இயக்குனர். 



    அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என்று படம் வந்த பிறகு தெரிந்து கொண்டேன். ஒரு குப்பைக்கதை படத்திற்கு பிறகு சுந்தர்சியின் அவுனி மூவீஸ் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியலில் நடிக்க ராஜ்கபூர் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த நன்றியை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.

    ஒரு குப்பைக் கதை என் சினிமா வாழ்கையில் பெரிய திருப்புமுனை. அதற்காக எனக்கு வாய்ப்பளித்த படத்தின் தயாரிப்பாளர் அஸ்லாம் மட்டும் இயக்குனர் காளிரங்கசாமி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறேன். மற்றும் பெயர் சூட்டப்படாத இரண்டு படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாஸ்டர் தினேஷ், மனிஷா யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஒரு குப்பைக் கதை படத்தை பார்த்த பார்த்த மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ படக்குழுவினரை பாராட்டியுள்ளார். #OruKuppaikathai
    சமீபத்தில் தயாரிப்பாளர் அஸ்லம் தயாரிப்பில் அறிமுக இயக்கு​னர் காளி ரங்கசாமி இயக்கத்தில் 'ஒரு குப்பை​க்​ கதை' படம் வெளியானது. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள இந்தப்படத்தில் மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார். மிகசிறந்த படம் என படம் பார்த்தவர்களும், பத்திரிகை, ஊடகங்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில் இந்த சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை கொண்ட இந்தப்​ ​படத்தை​க்​ கட்டாயம் பார்க்கவேண்டும் என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர்​ வைகோ வெகுவாக பாராட்டியுள்ளார். 

    இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ‘பெண்கள் அனைவரும் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஒரு குப்பை​க்​ கதை' படத்தை​ப்​ பார்க்கவேண்டும். இன்றைக்கு மணமுறிவுகள் ஏற்படுவது, கள்ளக்காதலில் மனைவி படுகொலை, கணவன் தலையில் மனைவி அம்மிக்குழவியை போட்டு​க்​ கொன்றாள், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை படுகொலை செய்வது என அன்றாடம் இதுபோன்ற செய்திகளை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். என் நெஞ்சே கொதிக்கின்றது. 50 ஆண்டுகளுக்கு முன் இதுபோல் கிடையாது. அறம் வளர்த்த நாடு நம்முடையது.

    இந்த சமூகத்தில் வெளிவராத அந்தரங்க ஆபத்துக்கள் எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை ஆபாசமில்லாமல் இந்தப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். நம் சமூகத்தில், குடும்ப வாழ்க்கையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், யாரை அணுகவிட வேண்டும்​.​ அணுகவிட​க்​ கூடாது என்பதையும், கணவன் எவ்வளவு வசதியானவனாக இருந்தாலும் அவனுக்கு நல்ல சுற்றுப்புற சூழல் இல்லாவிட்டால் எவ்வளவு கஷ்டம் என்பதையும் அருமையாக காட்டியிருக்கிறார்கள்.

    இந்த திரைப்படத்தை பார்த்ததும், இன்றைய சமூகத்தின் அவலங்களுக்கு மத்தியிலே வாழும் மக்கள் இந்தப்படத்தை கட்டாயம் பார்க்கவேண்டும் என நினைத்தேன். அந்த அளவுக்கு இதில் ஒரு மெசேஜ் இருக்கிறது. சமூகம் இருக்கும் இன்றைய சூழலில் இவ்வளவு நல்ல திரைப்படத்தை இயக்குன​ர் காளி ரங்கசாமி எடுத்துள்ளார். இதில் நடித்தவர்களும் உண்மையிலேயே நடித்தது போலவே இல்லை. வாழ்ந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    இதில் காட்டப்பட்டுள்ள பகுதியை​ப்​ பார்க்க என்னடா இப்படி இருக்கிறதே என தோன்றியது. ஆனால் அதுதான் வாழ்க்கை. இன்னொரு உலகம் இருக்கிறது. அது ஏழு நட்சத்திர ஹோட்டல் உலகம். அந்த உலகம் வேறு. அந்த உலகத்தை​ப்​ பார்க்கிறோம்.. அந்த கட்டடங்களை​ப்​ பார்க்கிறோம். அந்த மக்களை​ப்​ பார்க்கிறோம்.. ஆனால் நரகத்தை​ப் போல் ஆக்கப்பட்டுவிட்ட இந்த குப்பையிலும் சாக்கடையில் வாழ்கின்ற ஏழை எளிய மக்களின் வாழ்க்கை இருக்கிறதே இது உண்மை. பிரபல இயக்குனர் சத்யஜித்ரே தனது படங்களில் இதுபோன்ற விஷயங்களை காட்டித்தான் பல விருதுகளை வாங்கினார்.



    இந்தப்படத்தில் அரைகுறை ஆடைகள் கிடையாது. ஆபாசமான காட்சிகள் கிடையாது. இயற்கையான வாழ்க்கையை அப்படியே தத்ரூபமாக படமாக எடுத்துள்ளார்கள். இந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்குமா என்பதை விட, மக்கள் இந்தப்படத்தை பார்த்து படம் எடுத்தவர்களுக்கு கடன் இல்லாமல் செய்ய, தங்களது கடனை செய்யவேண்டும்.

    இந்த சமூகத்தில் வசதி படைத்த இளைஞர்கள், எப்படிவேண்டுமானாலும் யாருடைய வாழ்க்கையையும் எளிதாக சீரழிக்கலாம் என அவர்கள் மனது கெட்டு வளர்த்துக்கொண்டு இருக்கிறது. அந்த மாதிரி அவர்கள் மாறிக்கொண்டு இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. அவர்கள் மாறவேண்டும்.. இந்தப்படத்தை பெண்கள் கட்டாயம் பார்க்கவேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக படம் எடுக்கும்  இந்த காலத்தில் லட்சியத்திற்காக படம் எடுக்கும் காளி ரங்கசாமி போன்ற​ இயக்கு​ன​ர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்’ என்றார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒரு குப்பை கதை படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கும் மனிஷா யாதவ் தனது பிடிவாதத்தால் படவாய்ப்பை இழந்ததாக கூறியிருக்கிறார். #ManishaYadav
    மனீஷா ஒரு குப்பை கதை படம் மூலம் தன்னை நிரூபித்துவிட்டார். அவரிடம் பேசியதில் இருந்து...

    அதுதான் ஆறு, ஏழு வருடங்கள் ஆகிவிட்டதே? நான் முன்பே பேசுவேன். ஆனால் முழுமையாக தவறே இல்லாமல் பேச ஆசைப்பட்டேன். இப்போது அந்த நம்பிக்கை ஏற்பட்டதால் தமிழில் பேசுகிறேன்.

    திருமணத்துக்கு பின் தவறான வழிக்கு செல்லும் பெண்ணாக நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?

    ஒரு பெண் முதல் பாதியில் ஒரு கதாநாயகனுடன் ஆடிப்பாடி விட்டு இரண்டாம் பாதியில் இன்னொருவருடன் ஆடிப்பாடினால் இந்த கேள்வி வந்து இருக்காது. படத்தில் எந்த இடத்திலும் ஆபாசமோ, விரசமோ இல்லை. அனைவரும் பார்க்கலாம் என்று தணிக்கையில் சான்று பெற்ற படம் தானே? நடிக்க வாய்ப்புள்ள ஒரு வேடத்தை இமேஜ் பார்த்து ஏன் விட வேண்டும்? இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் நடப்பது தானே? நான் ஒரு சாதாரண பெண்ணை திரையில் பிரதிபலித்து இருக்கிறேன்.

    நீங்கள் நடிக்கும் படங்கள் பெயர் எடுக்கின்றன. ஆனால் அதிக படங்களில் நடிக்கவில்லையே?

    என் மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க நான் விரும்புவதில்லை. படத்தில் வெறும் பொம்மையாக வந்து செல்லமுடியாது. என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். நிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்துள்ளேன். கதையும் கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம்.



    7 ஆண்டுகால காதலை எப்படி ரகசியமாவே பாதுகாத்தீர்கள்?

    அவர் என்னுடைய பள்ளி காலத்திலேருந்தே நண்பர். இவருடன் தான் நம் வாழ்க்கை அமையவேண்டும் என்பது சின்ன வயதில் இருந்தே உறுதியாக இருந்தேன். இப்போது கூட எனக்கு முழு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருக்கிறார். என்னை பின்னால் இருந்து இயக்கும் சக்தி அவர்.

    தோழிகள், பார்ட்டி என்று உங்களை பார்க்க முடியவில்லையே?

    வேலை முடிந்ததும் முதல் வேலையாக அடுத்ததாக இருக்கும் விமானத்தை பிடித்து பெங்களூரு வந்துவிடுவேன். சினிமாவில் எனக்கு தோழிகள் உண்டு. ஆனால் யாரிடமும் நெருங்கி பழகியதில்லை.

    அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை கேட்டு வருகிறேன். விரைவில் அறிவிப்பு வரும் என்றார். #ManishaYadav
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காளி ரங்கசாமி இயக்கத்தில் மாஸ்டர் தினேஷ் - மனிஷா யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஒரு குப்பைக் கதை' படத்தின் விமர்சனம். #OruKuppaiKathai #Dinesh #ManishaYadav
    தான் கொலை ஒன்று செய்துவிட்டதாக போலீசில் சரணடைகிறார் மாஸ்டர் தினேஷ். கொலை பற்றி போலீசார் அவரிடம் விசாரிக்க நடந்தவகளை ஒவ்வொன்றாக யோசிக்க அவரது முந்தைய வாழ்க்கை ஆரம்பமாகிறது.

    அதில், மாநகராட்சியில் குப்பை அள்ளும் தொழிலாளியாக வேலை பார்க்கிறார் தினேஷ், சென்னையில் குப்பம் ஒன்றில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். இவருடன் குப்பை அள்ளும் தொழிலாளியாக யோகி பாபு வருகிறார். தினேஷுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவரது அம்மா பல இடங்களில் பெண் பார்த்தும் ஏதுவும் அமையவில்லை. எந்த ஒரு கெட்ட பழக்கமும் இன்றி பண்பானவனாக, நேர்மையானவனாக இருக்கும் அவருக்கு, செய்யும் தொழிலால் பெண் கொடுக்க மறுக்கின்றனர். 

    இந்த நிலையில், தனது நண்பர் ஒருவர் மூலம் மனிஷா யாதவ்வை பெண் பார்க்க செல்கின்றனர். மனிஷா வீட்டில் மாப்பிள்ளை ஒரு கம்பெனியில் கிளார்க்காக பணிபுரிவதாக பொய் சொல்லச் சொல்கின்றனர். ஆனால் பொய் சொல்ல மனமில்லாமல், மனிஷாவின் அப்பாவான ஜார்ஜிடம் தான் குப்பை அள்ளும் தொழிலாளி என்கிற உண்மையை தினேஷ் சொல்கிறார். ஜார்ஜக்கு அவரது நேர்மை பிடித்துப்போக தனது பெண்ணை அவருக்கே கொடுக்க சம்மதிக்கிறார். 



    மேலும் மனிஷாவிடம், தினேஷன் தொழில் குறித்து சொல்ல வேண்டாம் என்றும் ஜார்ஜ் கேட்டுக் கொள்கிறார். இதையடுத்து மாஸ்டர் தினேஷுக்கும், மனிஷாவுக்கும் திருமணம் நடக்கிறது. மனிஷா கர்ப்பமாகியிருக்கும் நிலையில், தினேஷ் குப்பை அள்ளும் தொழிலாளி என்பது தெரிந்து விடுகிறது. இதையடுத்து தினேஷை வெறுக்க ஆரம்பிக்கும் மனிஷா, குழந்தை பெற்றுக் கொள்ள பிறந்த வீட்டுக்கு செல்கிறாள். குழந்தை பிறந்த பிறகு, தன்னால் மீண்டும் அந்த குப்பத்திற்கு வர முடியாது என்று மனிஷா கூறிவிடுகிறாள். இதையடுத்து அடுக்குமாடிக் குடியிறுப்புக்கு குடிபெயர்கின்றனர். 

    அங்கு அவர்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஐ.டி. ஊழியர் ஒருவருக்கும், மனிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் மனிஷா அவருடன் ஓடிவிடுகிறார். இதனால் கடும் மனவேதனைக்கு உள்ளாகும் தினேஷ், மனிஷா அவள் இஷ்டப்படி விட்டுவிட்டு, தனது குழந்தையை மட்டும் தன்னிடம் அழைத்த வர முடிவு செய்து மனிஷாவை தேடிச் செல்கிறார். 



    கடைசியில், தினேஷ் தனது குழந்தையை தன்னுடன் அழைத்து வந்தாரா? தினேஷ் ஏன் போலீசில் சரணடைந்தார்? அங்கு கொலை செய்யப்பட்டது யார்? மனிஷா என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    முதல் படத்திலேயே முன்னணி கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்கிறார் மாஸ்டர் தினேஷ். ஒரு குப்பை அள்ளும் தொழிலாளியாகவே வந்து மனதில் நிற்கிறார். மனிஷா யாதவ் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் பெரும்பாலும் கவர்ச்சி வேடங்களில் நடித்து கவர்ந்திருந்தாலும், இந்த படத்தில் குடும்ப பெண்ணாக, குழந்தைக்கு அம்மாவாக அவரது கதபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பை நல்ல பயன்படுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 

    யோகி பாபு காமெடியுடன் குணசித்திர கதாபாத்திரத்திலும் கலக்கியிருக்கிறார். ஜார்ஜ், அதிரா, கோவை பானு. செந்தில், லலிதா என சின்ன சின்ன கதாபாத்திரங்களும் வாய்ப்பை பயன்படுத்தி நடித்திருக்கின்றனர்.  



    குப்பை அள்ளுவதை விரும்பி செய்யும் ஒருவருக்கு, அந்த தொழிலால் ஏற்படும் அவமானங்கள், அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என அனைத்தையும் எதார்த்தமாக, உணர்ச்சிப்பூர்வமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் காளி ரங்கசாமி. 

    படத்தில் கதாபாத்திரத்தின் உயரம் குறைவாக இருந்தாலும், மனதால் அந்த கதாபாத்திரங்கள் உயர்ந்த காட்டியிருக்கிறார். நமது சமூகத்தில் ஒரு குடும்பத்தில் கள்ளத் தொடர்பால் ஏற்படும் பிளவு, அதனால் இருவரது வாழ்க்கையும் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது  என்பதை காட்டியிருக்கிறார். தற்போதைய இளைஞர்கள் தான் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்றால், இளம் பெண்களும் பொழுதுபோக்குக்கு ஆசைப்பட்டு விபரீதத்தை பொறுட்படுத்தாமல் வீணாவது என பலவற்றை அலசியிருக்கிறார். 



    குப்பை அள்ளுபவன், உள்ளத்தால் சுத்தமாக இருக்கிறான். நாகரீகமாக இருப்பவர்கள், உள்ளத்தால் குப்பையாக இருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக காட்டியிருக்கிறார். படத்தின் திரைக்கதையும், வசனமும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. ஒரு குப்பைக் கதை படம் மூலம் ஒரு நல்ல கதை கொடுத்த இயக்குநர் என்ற பெயரை பிடிப்பார். 

    ஜோஸ்வா ஸ்ரீதரின் பின்னணி இசை அலட்டல் இல்லாமல் சிறப்பாக வந்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். மகேஷ் முத்துச்சுவாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `ஒரு குப்பைக் கதை' தூய்மையானது. #OruKuppaiKathai #MasterDinesh #ManishaYadav

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒரு ஷோவுல ஆடும்போது தினேஷ் மாஸ்டரை கிண்டலடித்த என்னை, எதிர்நீச்சல் படத்தில் ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். #OruKuppaiKathai #Sivakarthikeyan
    பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பை கதை'. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார். இயக்குனர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி.

    மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.

    இதில் நடிகர் ஆர்யா பேசும்போது, “என்னை மாதிரி ஆட்களுக்கு தினேஷ் மாஸ்டர் தான் வசதி. எனக்கு ரிகர்சல் கொடுத்து ஆடச்சொல்வார். அப்படியும் செட்டாகலைன்னா, அவரோட குரூப்ல இருக்குறவங்களை கூப்பிட்டு, ஆர்யா எப்படி ஆடுறாரோ அதை நீங்க பாலோ பண்ணிக்குங்கன்னு சிம்பிளா வேலையை முடிச்சுடுவார். நான் உட்பட எத்தனையோ பேர் அவரை ஹீரோவா நடிங்கன்னு சொன்னபோது எல்லாம் மறுத்துவிட்டார். அப்படிப்பட்டவர் இந்தப்படத்தில் நடித்துள்ளார் என்றால் நிச்சயம் இதில் ஏதோ விஷயம் இருக்கும். இந்தப்படத்தை பார்க்கும்போது தினேஷ் மாஸ்டர் ரியலிஸ்டிக்கா நடிச்சிருக்கார்” என்றார். 

    நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “இந்த விழாவில் கலந்துகொள்வது என் கடமை. இதன்மூலம் தான் தினேஷ் மாஸ்டருக்கு கைமாறு செய்யமுடியும். ஒரு ஷோவுல ஆடும்போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் என கிண்டலடித்தேன். ஆனால் எதிர்நீச்சல் படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார். 



    ஒரு துறைல இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்ய்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள். அதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு போகவேண்டும். நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம். ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப்படத்தை வாங்கியிருப்பது, மற்றவர்கள் எல்லாம் இந்தப்படத்தில் உங்கள் படத்தை பாராட்டுவது என 5௦ சதவீதம் தாண்டி விட்டீர்கள். மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் நூறு சதவீதம் வெற்றியை அடைவீர்கள்” என வாழ்த்தி பேசினார். 

    இயக்குனர் அமீர் பேசும்போது, “இந்தப்படத்தின் கதை தயாரிப்பாளர் அஸ்லம் மூலம் என்னிடம் முதலில் வந்தது. கதைகேட்ட பின் இயக்குனர் காளி ரங்கசாமியிடம் சில மாற்றங்கள் செய்தால் நடிக்கலாம் என சொன்னேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக அஸ்லம் சொன்னார். ஆனால் ஒரு இயக்குனராக அவரது உறுதியான முடிவை பாராட்டுகிறேன். 

    படத்தின் நாயகன் தினேஷ் மாஸ்டர் பேசும்போது, “இப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கையில நடக்கும்னு நினைச்சே பார்க்கலை. இந்தப்படத்தில என்னை ஹீரோன்னு சொல்லாதீங்க.. என்னைய ஹீரோவா போட்டா என் உயரத்துக்கு கதாநாயகியே கிடைக்காதுன்னு டைரக்டர்கிட்ட சொன்னேன்.. என் மனைவியுடன் கலந்து ஆலோசித்த பின்பே இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.. கதை, ஒரு மாதிரியான கதைதான்.. டான்ஸ் அப்படி இப்படின்னு இருந்தா வேண்டாம்னு சொல்லிருப்பேன்” என்றார்.​
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    படத்தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், நடிகர் என பன்முகம் கொண்ட உதயநிதி ஸ்டாலின், எங்களுக்கும் கோபம் வரும் என்று பட விழாவில் கூறியிருக்கிறார். #UdhayanidhiStalin #OrukuppaiKathai
    பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஒரு குப்பை கதை'. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார். இயக்குனர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி.

    மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.

    இந்த விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, “குப்பை அள்ளக்கூடிய மனிதர்களை கதையின் நாயகர்களாக்கியதற்கும், அந்த கதாநாயகனாக தினேஷ் மாஸ்டரை நடிக்க வைத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். குப்பையில் தான் என்னென்ன கிடக்கின்றன..? குப்பை ஆரோக்கியமாக இருந்தால் தான் நாடு ஆரோக்கியமாக இருக்கும். தினேஷ் மாஸ்டர் என் படங்களுக்கான நாயகன் போல தெரிகிறார். அவர் மூலமாகத்தான் ‘தர்மதுரை ‘மக்க கலங்குதப்பா’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது” என்றார்.

    இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, “ரெட் ஜெயன்ட் மூவிஸ், குறிப்பாக செண்பகமூர்த்தி சார் ஒரு படத்தை வாங்குகிறார் என்றால் நிச்சயம் அந்தப்படம் வெற்றி அடையும். பட தயாரிப்பில் கூட சில சமயம் அசந்துவிடுவார். ஆனால் படங்களை வாங்கி வெளியிடுவதில் கெட்டிக்காரர்” என்றார். 

    உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் சார் நடித்த குருவி படம் மூலமாக தயாரிப்பில் இறங்கி இதோ பத்து வருடம் வெற்றிகரமாக ஓடிவிட்டது. இதில் நல்ல படங்கள், ஆவரேஜ் படங்கள், சில மட்டமான படங்களை கூட கொடுத்துள்ளோம். ஆனால் இந்தப்படம் மைனா போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம்.



    நான் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் எப்படி சந்தானம் தொடர்ந்து எனது படங்களில் இடம்பிடித்தாரோ அதேபோல தினேஷ் மாஸ்டரும் என் படங்களில் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். மாஸ்டராக இருக்கும்போது சரியான நேரத்திற்கு வந்தவர், இப்போ ஹீரோ ஆனதும் லேட்டா வர ஆரம்பிச்சுட்டார் போல. என்ன மாதிரி சில பேர்க்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்து என்னடா இவனுங்க இப்படி ஆடுறாங்கன்னு, அந்த கோபத்துலே இதுல நல்லதா நாலு டான்ஸ் ஆடியிருப்பார்னு நினைக்கிறன்.

    தப்பான படங்கள் கொடுத்தால் திட்டுகிறீர்கள். கழுவி ஊற்றுகிறீர்கள். அதேசமயம் நல்ல படங்களை கொடுக்கும்போது நீங்கள் எங்களுக்கான வரவேற்பை கொடுங்கள். இல்லாவிட்டால் எங்களுக்கும் கோபம் வரும்” என்றார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு குப்பைக் கதை படத்தில், மைனா படத்தின் தாக்கத்தை உணர முடிந்ததாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். #OruKuppaiKathai #UdhayanidhiStalin
    நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக அறிமுகமாகும் படம் ஒரு குப்பைக் கதை. காளி ரங்கசாமி இயக்கியிருக்கும் இந்த படத்தில் மனிஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது. 

    படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. அதில் நடிகர் உதயநிதி, ஆர்யா, சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

    விழாவில் உதயநிதி பேசும் போது, 

    தினேஷ் மாஸ்டருக்கும், எனக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. எனது முதல் மூன்று படங்களுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் சொல்லிக் கொடுத்தார். என்னை நடனமாட ஊக்குவித்தவர் இவர் தான். எங்கள் இருவருக்கும் ஒரு அண்ணன், தம்பிக்குண்டான பாசம் இருக்கிறது. 



    இப்படி இருக்கும் போது, இவர் ஏன் ஹீரோவாக நடிக்கிறார் என்று முதலில் யோசித்தேன். பின்னர் படம் பற்றி கேள்விப்பட்ட நான், படத்தை நாமே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். ஒரு குப்பைக் கதை படம் மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல படங்கள் வந்தால் பாராட்டுவதும், சுமாரான படங்களை விமர்சிப்பதும் வழக்கம் தான். 

    அந்த வகையில் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் என்று நம்புகிறேன். படம் மே 25-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்றார்.  #OruKuppaiKathai #UdhayanidhiStalin

    ×